அவன்? ஆலமரத்தடியிலே அவன் நின்று கொண்டிருந்தான். அவன் ஓர் பெரிய இடத்துப் பிள்ளை என்பதை அவன் அணிந்திருந்த ஆடைகள் கூறின. ஆழ்ந்த சிந்தனையோடு அந்த மரத்தடியிலே நின்று அங்குமிங்கும் பார்த்துக்கொண் டிருந்தான். அந்த மரத்திற்கெதிரே ஓர் பெரிய மாளிகை அமைந் திருந்தது. அந்த மாளிகையும் பெரிய இடத்தைச் சேர்ந்தது என்று. அதன் அமைப்பு கூறியது. மரத்தையும் மாளி கையையும் அவன் மாறிமாறிப் பார்த்தான். பார்க்கும் அந்த விழிகளிலே ஏதோ விஷயம் அடங்கி இருந்தது மாத் திரம் தெரிந்தது. ஆனால் அவ்விஷயம் என்ன? மரத்தடியிலே அவன் ஏன் நிற்கிறான்? அவன் யார்? அந்த மாளிகைக்கும் அவ னுக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா? சம்பந்தம் இல்லை என்பதை நிரூபிப்பதுபோல் அப்போது மாளிகையிலிருந்து வந்த வேலைக்காரன் என்ன தம்பி! இங்கே ஏன் நிக்கிற? யாரைப்பார்க்கணும்? நீ யார்' என்று கேட்டான். 31 71 "ஏன் நிற்கக்கூடாதா? வெளியூர் போகிறேன்; மரத் தடியிலே இளைப்பாறுகிறேன்" என்று அவன் அந்த வேலைக் காரனிடம் சொல்லிக்கொண்டு இருக்கும்போது ஒரு புதிய செவர்லெட் கார் வந்து மாளிகை முன் நின்றது. காரையும், காரில் இருந்த ஆளையும் கண்டவுடன் அவன் ஓடமுயற்சித்தான். ஆனால் காரில் இருந்தோர். பிடியுங்கள்' என்று கூறியதும். மாளிகை வேலைக்காரன் 24
பக்கம்:கேட்கவில்லை.pdf/25
Appearance