உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ. வி.பி. ஆசைத்தம்பி 'சிறை அனுபவம்' என்கிற சிங்கார மனைவி, அரசியல் வாதிகள் சிங்காதனம்வரை முன்னேற நல்ல துணைவியாக இருக்கிறாள். உண்மைக் குற்றவாளிகளாக உள்ளவர்க வர்களைச் சீர் திருத்தும் கல்விச் சாலையாக உள்ள சிறைச்சாலை, குற்ற வாளிகளை சிறிதும் திருத்தாமல் மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் ஆற்றல் படைத்தவர்களாகவும்-குற்றம் செய்ய அஞ்சாதவர்களாகவும்- உற்பத்தி செய்து கொண்டிருக்கும் போது - இன்றைய சிறைச்சாலையை சீர்திருத்துவது எப்படி ? "சிறைச்சாலையை சீர்திருத்துவதற்கு ஒரே வழிதான் அது சிறையை தகர்ததெறிவதுதான்" உண்டு. ரஷ்ய ஞானி கூறியிருக்கிறார். ஏன்? எப்படி ? 2 என்று ரஷ்ய ஞானி கிராபட்சின் பிரபு சாதாரணமானவரல்ல பல தடவை, பல சிறைகளிலே அவர் கைதியாக இருந் திருக்கிறார். அவர்தான் கூறுகிறார். சிறையைச் சீர்திருத்துவதற்கு ஒரே வழி சிறையை தகர்த்தெறிவது என்று. குற்றம் செய்வது ஓர் வியாதிதான்! அந்த வியாதியை. வேண்டுமென்றே சம்பாதிக்க எந்த நோயாளியும் விரும்ப மாட்டான். ஆனால் சூழ்நிலை அந்த வியாதியை சிருஷ்டிக் கிறது. சூழ்நிலையை சுத்தம் செய்துவிட்டால் வியாதிகள் தானாகவே வீழ்ச்சியடைந்து விடும். 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/43&oldid=1735782" இலிருந்து மீள்விக்கப்பட்டது