சிறைச்சாலை தூங்கிக்கொண்டு இருப்பார்களா ? சிறு கிளர்ச்சி, புரட்சி ஏற்பட்டு சமூகம் விழிப்படைந்தால்...புதுச் சட்டம் ஏற்பட டே தீரும். இது சரித்திரம் தரும் பாடம். அது வரை தனி மனிதர்கள் தண்டனை அனுபவிக்கத் தான் நேரிடும்; பல கொடுந் துன்பங்களை ஏற்கத்தான் வண்டும்; ஆனால் முடிவில் தண்டனைக்கு காரணமாக இருந்த பிற்போக்கு சக்தி அதன் பலனை அனுபவித்தே தீரும். சர்க்காரின் சட்டத்திற்கு விரோதமாக செய்யப்படும் எந்தக் காரியமும் குற்றமாகும். ஆனால் சர்க்கார் சட்டம், மக்களுக்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளதா? இந்திய அரசியல் சட்டத்தை நிர்மாணிக்கும் மூல புருஷர்களில் ஒரு வராக இருந்த டாக்டர் அம்பேத்கார் அவர்களே அந்தச் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கூறி விட்டார். இந்த நிலையில் தென்னாட்டு மக்களின் வீழ்ச்சிக்கு காரணமாயுள்ள இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோத சக்தி பெருகிவருவதிலே ஆச்சரியம் இருக்க முடியாது. இந்திய அரசியல் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளால் அமைக்கப்படவில்லை பணத்தாலும், போலிச் செல்வாக்காலும் கைப்பற்றப்பட்ட கிறுபான்மை யோரால் அவசர அவசரமாக ஆக்கப்பட்டதுதான் இந்தியச் சட்டம். 47
பக்கம்:கேட்கவில்லை.pdf/48
Appearance