சிறைச்சாலை மேல் நாட்டுச் சிறைகளோடு இந்திய சிறைகளை ஒப்பிட் டுப் பார்க்கும்போதுதான் அவர் அவ்விதம் கூறியிருக்கிறார். இந்திய சிறைகளை ஒப்பிடுவானேன்? இந்திய வீடுகளை. மேல் நாட்டு வீடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது. இந்திய வீடுகளெல்லாம் புறாக்கூடுகள்தான் ! மேல்நாட்டு வீடுகளிலே, ஆளுக்கொரு அறையும். குளிக்க ஒரு அறையும், குந்திப் பேச ஒரு ஹாலும், சமை யலுக்கும், சாப்பாட்டுக்கும் தனித்தனி இடமும், வெளிச்சத் திற்கு வேண்டிய ஜன்னலும் இன்னோரென்ன எல்லா வசதி களும் இருக்கும். ஏழைகள் வசிக்கும் இடத்தில்கூட. ஆனால் - இந்திய வீடுகளில் நூற்றுக்கு ஒன்றில்கூட இந்த வசதிகள் கிடையாது. ஏதோ ஓரிரு பணக்காரர்களின் 'பங்களா'க்கள்தான் அரைகுறை நாகரீகமாக அமைக்கப் பட்டிருக்கின்றன. சுடுகாட்டிலாவது சுதந்திரமாக நீட்டிப் படுக்க, ஆறடி மண் அனைவருக்கும் தரப்படுகிறது. ஆனால், லட்சக்கணக் கான இந்திய குடிசைகள் நீள அகலத்தில் ஆறடிகூட இல்லா மல் இருட்டறையாக அமைந்தும் இருக்கின்றன. ம இந்தியச் சேரிகளில் வாழும் மக்களின் குடிசைகளும் பம்பாய் தாராவிப் பகுதியில் வாழும் தமிழர்களின் வீடுகளும் மேலே குறிப்பிட்ட 'பிளான்'படி கட்டப்பட்டவைதான். 49
பக்கம்:கேட்கவில்லை.pdf/50
Appearance