ஏ. வி. பி. ஆசைத்தம்பி தன்னையும் தன் மனைவியையும் வைத்தியர்களிடம் நன்கு பரிசோதித்துப் பார்த்தார் ஐயர். பீஸ் இவ்வளவு வேண்டும். அவ்வளவு வேண்டும், என்று வைத்தியர்கள் கேட்கவே யில்லை. ஐயர் அதிகமாகவே அள்ளி வீசுவார் என்று அவர்களுக் குத் தெரியும்போது கேட்கவேண்டிய அவசியமென்ன ? ஏழை எளியவர்களிடமென்றால், பணம் இருக்கிறதா என்று வைத்தியர்கள் கேட்பார்கள். கொடை வள்ளல் ஐயரிடம் கேட்பார்களா ? ஐயர் ஆயிரமாயிரமாகச் செலவு செய்தார். ஆனால் ........ 44 மிஸ்டர் ஐயர் ! உங்களுக்கு இந்தப் பெண்குழந்தை பிறந்ததே ஆச்சரியம்! என்றனர் வைத்தியர்கள். இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளட்டுமா, என்று வைத்தியர்களிடம் ஐயர் கேட்கவேயில்லை. ஒரு கல்யாண மென்ன, ஒன்பது கல்யாணம் செய்துகொண்டாலும், பிள்ளை பெறும் தகுதி தன்னிடம் இல்லை என்பதை மட்டும் ஐயர் தெரிந்து கொண்டார். தன் மனைவிக்கு இன்னொரு கல்யா ணம் செய்துவைத்தால் ஒரு வேளை பிள்ளை பிறக்கலாம் என்பதை ஐயர் புரிந்து கொண்டார். இந்நிலையில் மறு விவாகம்பற்றி ஐயர் நினைக்கவோ, கேட்கவோ செய்தாரா? இன்னொரு கல்யாணத்திற்கு ஜோஸ்யன் எவ்வளவோ சிபார்சு செய்தான்: கல்யாணத் தரகன், அப்சரஸ் போன்ற அடுத்த பெண்களைக் காட்டியும் ஆசை ஊட்டிப் பார்த்தான். இருவர் பேச்சையும் ஐயர் கேட்கவே இல்லை. அபூர்வமாகப் பிறந்த ராஜமாவது ஆணாகப் பிறந்திருக் கக் கூடாதா என்ற கவலை ஐயருக்கு இருக்கத்தான் செய்தது பண் இருந்து பயனென்ன ? என்றாவது ஒருநாள் இன் னாருவன் வீட்டுக்குப் போகவேண்டியவள் தானே பெண்? 7
பக்கம்:கேட்கவில்லை.pdf/8
Appearance