பக்கம்:கேட்பாரில்லை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை.ஏன்? ஆரம்பம் முதலே மக்களின் ஆட்டு மந்தை குணத்தை வளர்த்த தலைமை பீடத்துக்கு சரியான பூசை பூசிப்பலப்படுத்திக் கொள்வதால் ஊரை ஏமாற்றி உலகோரை அறியாதவர்களாக்கி மனிதப்பண்பை ஒடுக்கி தாம் வாழ்யோரை யார் கேட்பது ? மனிதர்கள்தான் கேட்க வேண்டும்.சிந்தித்து உண்மை உணர்ந்து போலித்தனங்களை அம்பலப்படுத்திக் கேட்க வேண்டும்.

.ஆனால் மக்களிடையே தாழ்மை மனோபாவமே விதைத்து வளர்க்கப் படுகிறது.அவர்கள் சூழ்நிலைகளும் வாழ்க்கையின் கதியும் அப்படி ஆக்கி விடுகிறது. தலைநிமிர்!விழி!எழு!உணர்!என்று கோஷிக்கப்பட்டாலும் மனிதரில் அநேகர் மண்ணை நோக்கிக் குனிந்து தாழ்ந்தே விழுகின்றனர். 'நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும்'

அணி செய்ய மக்கள் உலவுவதற்கு, வஞ்சிக்கப்பட்டுள்ள

அவர்களுக்கு சகல வாழ்க்கை வசதிகளும் கிட்ட வழி பிறக்க வேண்டும். பிரசாரங்கள், பேச்சுகள், போதனைகள், உபதேச மகாத்மியங்களினால் எல்லாம் பயன் கிடை யாது. வாழ வழி காட்டும் திட்டங்களிட்டுச் செய லாற்றவேணும். எல்லோரும் வாழவேண்டும். வாழ உரிமை வேண்டும். அது தான் உண்மையான சுதந்திரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/17&oldid=1395223" இலிருந்து மீள்விக்கப்பட்டது