பக்கம்:கேரக்டர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'அவுட்' அண்ணாஜி

நேர்வகிடு, நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கையிலே தோல் பை, கலகலப்பான குரல் - இவை யாவும் அவுட் அண்ணாஜிக்கே உரிய அம்சங்கள்.

இந்த உலகத்தில் அண்ணாஜிக்குத் தெரியாத ஆசாமிகளே கிடையாது.

முன்பின் தெரியாதவர்களிடத்திலேகூட ரொம்ப நாள் பழக்கப்பட்டவனைப் போல் பேச ஆரம்பித்து விடுவான்.

அவுட் வாணம் உதிர்வது போல் 'சளசள' வென்று பேசிக்கொண்டே இருப்பான். ஆனாலும் அவன் பேச்சிலே ஒரு சுவாரசியம் இருக்கும்.

"எங்கேடா, அண்ணாஜி! உன்னைக் கொஞ்ச நாளாய்க் காணோம்?" என்று யாராவது கேட்டுவிட்டால் போதும். புருடாக்களும், கப்சாக்களுமாய் உதிர்த்துத் தள்ளிவிடுவான். தன்னுடைய பொய்களைக் கேட்பவர்கள் நம்புவார்களா என்பதைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை.

"நேற்றுதான் டில்லியிலிருந்து திரும்பி வந்தேன். போன இடத்தில் ஒருவாரம் 'டிலே' ஆகிவிட்டது. இப்போதுதான் ப்ளே'னில் மீனம்பாக்கம் வந்து இறங்கினேன். டாம் அண்டு டிக் கம்பெனி புரொப்ரைட்டரும் என்னோடுதான் விமானத்தில் வந்தார். அவர் காரிலேயே என்னையும் அழைத்து வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/10&oldid=1478395" இலிருந்து மீள்விக்கப்பட்டது