பக்கம்:கேரக்டர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

விட்டார்!" என்று தன்னுடைய பிரதாபங்களை அவிழ்த்து விடுவான்.

அண்ணாஜியைத் தெரியாத பேர்வழிகளாயிருந்தால் அவன் போடுகிற போட்டைக் கண்டு அசந்து போவார்கள். 'ரொம்ப செல்வாக்கு உள்ளவன்போல் இருக்கிறது!' என்றும் எண்ணிக் கொள்வார்கள். அண்ணாஜி சமாசாரம் அவர்களுக்கு என்ன தெரியும்!

"டில்லியிலே ஏன் டிலே?" என்று நாம் அவனைக் கேட்க வேண்டியதில்லை; அவனாகவே சொல்வான்:

"டிபன்ஸ் மினிஸ்டர் வி. கே. மேனன் என் கிளாஸ் மேட்டாச்சே. தற்செயலா என்னைப் பார்த்துவிட்டார். 'ஹல்லோ அண்ணாஜி! எங்கே கவனிக்காமலே போறே? வா பங்களாவுக்கு!' என்றார். அவரோ ஓல்ட் பிரண்ட்; டிபன்ஸ் மினிஸ்டர் வேறே. எப்படித் தட்டறது: சரின்னு அவரோட் போனேன். டீ கொடுத்தார். மேனன் ஆச்சே! எனக்கு டீ பிடிக்காது. என்ன செய்யறது! குடிச்சு வைத்தேன்."

"வந்தது வந்தே, என்னோடு கெய்ரோவுக்கு வறயா, நாசரைப் பார்த்துவிட்டு வரலாம்னார். எனக்கும் நாசர் கிட்டே கொஞ்சம் வேலை இருந்தது. சரின்னு புறப்பட்டேன்."

"நாசர்கிட்டே உனக்கென்ன வேலை?"

"ஒரு பிஸினஸ் விஷயமாகத்தான். நாசரிடம் அஸ்லான்டாம் காண்டிராக்ட் கேட்டிருந்தேன். 'சூயஸ் தகராறு தீரட்டும்; அப்புறம் சொல்றேன்'னு சொல்லியிருந்தாரு. கெய்ரோவுக்குப் போய்விட்டு இண்டியாவுக்குத் திரும்பினேன். பம்பாயில் இறங்கி டெஸ்ட் மாட்சைப் பார்த்து வீட்டுக் கார் ஏறப்போறேன். கிரிக்கெட் பிளேயர் கண்டிராக்டர் இல்லே கண்டிராக்டர்—அவன் என்னைப் பார்த்துட்டான். 'செஞ்சுரி போட்டேனே,பார்த்தாயா அண்ணாஜி?'ன்னான். கையைப் பிடிச்சுக் குலுக்கினான். 'பிளேன்லே ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/12&oldid=1478397" இலிருந்து மீள்விக்கப்பட்டது