பக்கம்:கேரக்டர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



126

சிறிது நேரத்துக்கெல்லாம் மற்றொருவர் வந்து, கேட்டயா அக்கிரமத்தை! திருவல்லிக்கேணி ரங்காச்சாரி இருக்கானே, அவன் லஞ்சம் வாங்கறானாம்பா! பெரிய யோக்கியன் மாதிரி வேஷம் போட்டானே!" என்பார்.

"லஞ்சம் வாங்காமே என்னடா செய்வான்? நீ அவன் நிலைமையில் இருந்தால் லஞ்சம் மட்டுமா வாங்குவே? கூடக் கொஞ்சமும் வாங்குவே. போடா, ஏதோ ஏழை பிழைச்சுட்டுப் போவான்னு விடுவியா? இதை ஒரு பெரிய சேதியா 'டாம் டாம்' போட வந்துட்டியே! வேணும்னா ஒரு தடவைக்கு வெத்திலை சீவலை எடுத்துண்டு போ" என்பார்.

அவர் போனதும் வேலுசாமி என்பவர் ரங்காச்சாரிக்காகப் பரிந்துகொண்டு வருவார். "பாவம் ஸார், அந்த ரங்காச்சாரி! 'பேமிலிமேன்' அவன் ஏதோ 'சம்திங்' வாங்கிட்டான்னு இந்த ஆசாமி ஊர் முழுவதும் சொல்லிக்கொண்டு திரியறான்! இவனுக்கு என்ன ஸார் வந்தது? இவன் மட்டும் வாங்க மாட்டானா? பெரிய அரிச்சந்திரன் மாதிரி பேசறானே?" என்பார் அவர்.

ஆனால், அவரையும் மடக்காமல் விடமாட்டார் ஏகாம்பரம். என்ன இருந்தாலும் ரங்காச்சாரி செய்தது தப்புதான் என்றும், மனுஷனுக்கு நாணயந்தான் முக்கியம் என்றும் தர்க்கம் செய்து அனுப்பி விடுவார்.

வேலுசாமி போனதும் வேறு ஒரு வேலைகெட்ட சாமி வருவார்.

"ஏகாம்பரம்! புதுப் படத்திலே ஒளரங்கசீப் முருகேசன் நடிப்பைப் பார்த்தீங்களா? அமர்க்களப்படுத்தி இருக்கான்யா? டயலாக்கை அப்படியே நீர்வீழ்ச்சி மாதிரி கொட்டறான்!"

"போய்யா, பெரிய நடிப்பைக் கண்டுட்டீர்! ஒரு காலத்தில் நான் அமெச்சூர் நாடகத்தில் நடித்ததைவிடவா? என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/126&oldid=1481164" இலிருந்து மீள்விக்கப்பட்டது