பக்கம்:கேரக்டர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

ஒருத்தன் இருக்கேனே. ஓரொரு சமயம் ஏண்டா இவ்வளவு பாபுலரா இருக்கோம்னுகூடத் தோன்றது. பிளேன் புறப்படறதுக்கு அரைமணி நேரம்தான் இருக்கும். என்ஜினீயரை என் காரிலேயே அழைச்சிண்டு நேரா ஏரோட்ரோமுக்குப் போனேன். அங்கே போனால் அயர்ன் மர்ச்செண்ட் அழகிரிசாமி அதே ப்ளேன்லே பங்களூருக்குப் புறப்பட்டுண்டிருக்கான் இவன் டிக்கட்டை மாற்றி என்ஜினீயர் கிட்டே கொடுத்து நீங்க புறப்படுங்கோன்னேன். அழகிரிசாமி அர்ஜண்டாப் போகணும்னு முணுமுணுத்தான். சரிதாண்டா, எதுக்கும் போறேன்னு எனக்குத் தெரியாத மாதிரி பேசறயே. என்கூட வா. இங்கேயே வாங்கிக் கொடுக்கறேன்னு சொல்லி ஒரு பர்மிட் ஹோல்டர் வீட்டுக்கு அழைச்சிண்டு போய்த் தொலைச்சேன். அந்தப் பர்மிட் ஹோல்டர் யாருன்னு நேட்கிறீங்களா அது ஒரு கதை. பர்மிட் வாங்கறத்துக்கு அவன் என் உயிரை வாங்கி விட்டான். நான்தான் போய் ஹயர் அதாரிடீஸ்கிட்டே பேசி, மெடிகல் சர்டிபிகேட் வாங்கி, பர்மிட்டும் வாங்கிக் கொடுத்தேன். அந்த ஹயர் அதாரிட்டிக்கு எங்கிட்டே ஒரு ஆப்ளிகேஷன்.

அவர் ஒருநாள் வந்து, 'நாகசாமி! உன்னைத்தான் மலையா நம்பிண்டிருக்கேன்' என்றார். சமாசாரத்தைச் சொல்லுங்கன்னேன்.

"பெண்ணுக்குக் கலியாணம்னார். யார் மாப்பிள்ளேன்னேன். நீதான் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துக் கொடுக்கணும்னார். ரிடயர்ட் அக்கௌண்டண்ட் ஜெனரல் சோமசுந்தரம் இல்லே அதான்ய்யா குருமூர்த்தி ஷட்டகர். அவர் பிள்ளை ஐ.ஏ.எஸ். படிச்சவன். அவனை நிச்சயம் பண்ணி வெச்சேன்.அத்தோடு விட்டாரா? அப்புறம் கலியாணத்தை நடத்தறதுக்கு இடம் வேணும்னார். அப்பட்ஸ்பரியிலே ஏற்பாடு பண்ணினேன். அப்புறம் நாதசுரம், சங்கீதக் கச்சேரி எல்லா ஏற்பாடும் நீதான் கவனிச்சுக்கணும் நாகசாமின் னுட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/138&oldid=1481407" இலிருந்து மீள்விக்கப்பட்டது