பக்கம்:கேரக்டர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

பண்றேன்னு சொன்னே. 'பந்தல்காரன், மேளக்காரன், பால்காரன், சமையல்காரன் எல்லாம் என் பொறுப்பு: நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்கோ'ன்னே?"

"நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க! இதோ, இப்பவே போய்ச் சத்திரத்தை 'பிக்ஸ்' பண்ணிடறேன். கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிடறேன். பாவ்காரன், சமையல்காரன், மேளக்காரனுக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடறேன். போதுமா? அவ்வளவுதானே? அப்புறம் என்ன? இன்னொரு சின்ன விஷயம்: மாப்பிள்ளைக்கு ரிஸ்ட்வாட்சு போடணும்னு சொல்லிண்டிருந்தீங்களே, ஒரு இடத்திலே பஸ்ட் கிளாஸ் சிங்கப்பூர் வாச் இருக்குது. வேணுமா? விலை ரொம்ப மலிவு. அவன் முந்நூறு ரூபாய் சொல்றான். வேணு மானா சொல்லுங்க. இருநூற்றைம்பதுக்கு முடிச்சுத் தரேன். முந்திக்காட்டாப் போயிடும்" என்றெல்லாம் கூறி, அந்தக் கடியாரத்தை இருநூற்றைம்பதுக்கு அவர் தலையில் கட்டி விட்டு,வாச்சின் சொந்தக்காரரிடம் இருநூற்று நாற்பதுக்குத் தான் விலை போயிற்று என்று கூறுவான். இதைத் தவிர, இரண்டு பேரிடமும் கமிஷன் வேறு தட்டிவிடுவான்.

"என்ன குப்பண்ணா, உன்னைப் பாக்கிறதே அபூர்வமாய்ப் போச்சே?"

"இன்னும் நாலு நாளைக்கு ஒண்ணும் பேசாதீங்க, அண்ணா! வக்கீல் சேஷாத்திரி வீட்டிலே கல்யாணம். மூச்சு விட நேரமில்லே. தேங்காய் வாங்கி வரக் கொத்தவால் சாவடிக்குப் போயிண்டிருக்கேன்."

"எங்க வீட்டுக் கலியாணத்திலே ஆயிரம் தேங்காம் மிஞ்சிப் போயிடுத்தே. அதை வித்துக் கொடுன்னு சொல்வியிருந்தேனே. மறந்துட்டியா?"

"வக்கீல்: வீட்டிலே பெரிய காயா இருக்கணும்னு சொன்னா, அதனாலே யோசிக்கிறேன். சரி, எதுக்கும் என்ன விலைன்னு சொல்லுங்க?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/143&oldid=1481413" இலிருந்து மீள்விக்கப்பட்டது