பக்கம்:கேரக்டர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'பப்ளிசிடி' பங்காருசாமி

நிலைக்கண்ணாடிமுன் நின்றபடி தம்மை அழகு பார்த்துக் கொண்டிருந்தார் பங்காருசாமி. தலைப்பாகையிலும், அங்கவஸ்திரத்திலும் பளபளக்கும் சரிகை, 'பங்காருசாமி', 'பங்காருசாமி' என்று அங்கவஸ்திரத்தின் கரை முழுவதும் அவருடைய நாமதேயம் பளபளத்துக்கொண்டிருந்தது. இடது கையில் தங்கப் பட்டைக் கடியாரம். வாய் நிறையத் தங்கப் பற்கள். விரல்களிலே வைர மோதிரங்கள்.

"ஐயா, உங்க போட்டோவும் பெயரும் பேப்பர்லே வந்திருக்குது" என்று ஒரு பத்திரிகையை நீட்டினார் கார் டிரைவர்.

பங்காருசாமி தம்முடைய தங்கப் பற்கள் தெரிய, அந்தப் பத்திரிகையை ஆவலோடு வாங்கிப் பார்த்தார். அவருடைய 'போட்டோ'வும் பெயரும் அந்தப் பத்திரிகையில் வெளியாகி யிருப்பதைக் கண்டபோது அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. அயல் நாட்டுக் கலைஞர் ஒருவர் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது பங்காருசாமி அந்தக் கலைஞருக்கு மாலை போடுகிற போட்டோ அது. பிரபலஸ்தர்கள், சினிமா நட்சத்திரங்கள் இவர்களில் யாராவது வெளிநாட்டுக்குப்போனாலும், வெளி நாட்டிலிருந்து வந்தாலும் அவர்களை வரவேற்கவோ வழி அனுப்பவோ பங்காருசாமிதான் முதலில் ஆஜராவார். அவர்தான் மாலை போடுவார். அவர்தான் கை குலுக்குவார். மறுநாள் தாம் மாலை போட்ட செய்தி பத்திரிகையில் வந்திருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/80&oldid=1479752" இலிருந்து மீள்விக்கப்பட்டது