பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


உட்காருவதற்கு முன்னமேயே யாருக்கு அருகில் யார் உட்கார வேண்டும் என்பதை, குழுவினர் இருவரும் திட்டமிட்டுத் தீர்மானித்துக் கொண்டுதான் உட்கார வேண்டும். அதுவே சிறந்த தொடக்கமாகும்.

ஏனெனில், ஒருமுறை ஆடுவதற்கென்று உட்கார்ந்து ஆட்டம் தொடங்கி விட்டால், அந்தப் போட்டி ஆட்டம் முடியும்வரை இடம் மாறவே முடியாது என்பது மிகமிக முக்கியமான விதியாகும்.

ஆட்டம் தொடங்கிய பிறகு, இருவரும் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளையும் இனி கூறுவோம்.

ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, நடுவரின் அனுமதியின்றி, ஆட்டக்காரர்கள், அருகில் இருப்பவர்களிடமோ பேசவே கூடாது.

இரட்டையர் ஆட்டத்தில் பங்கு பெறும் ஆட்டக்காரர் இருவரும், தங்கள் பாங்கருக்குள்ளேயே (Partner) ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதோ, பாவனைகள் மூலம் அந்தக் காயை அடி, இந்தக் காயை ஆடு என்று அறிவுரை கூற முயல்வதோ தவறாகும்.

அவரவர் விருப்பம் போலேவே ஆடலாம். ஆடவும் வேண்டும். அடுத்தவர் அதுபோல் பேசினால் அல்லது சைகை செய்து சாடை காட்டினால் கூட, அது தவறென்று குற்றம் சாட்டப்பட்டு, அதற்குரிய தண்டனையையும் நடுவர். வழங்கி விடுவார்.

அதற்குரிய தண்டனையாவது - அவர்கள் ஆடிசி கொண்டிருக்கிற அந்த ‘முறை ஆட்ட’ உரிமைக் காய்