பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்துக் கொண்டு இவர் எப்படி புது அலை ஆவார்:ஏடுகளினிடையிலிருந்து ஒரு கவரை எடுத்துத் தந்தார்.

முன்னும் பின்னும் திரும்பிப்பார்த்தேன். அனாவசியம். பழக்கக் கோளாறு. தபால் முத்திரையை ஆராயும் திருட்டுப் புத்தி. அத்தக் கையெழுத்தை அடையாளம் கண்டதும் மார் படபடத்தது.

'எப்போ வந்தது?’ எங்கெங்கோ முத்திரை உதை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறது.

"ஒரு வாரமாச்சு. நீங்களும் redirect விலாசம் தரல்லே. எங்கேயோ உள்ளே மூஞ்சூராட்டம் புதைஞ்சிருக்கீங்க. நீங்களே சொல்லாதபோது நான் எப்பிடிக் கேட்கறது.'

கண்டனத்துக்கும்-கருணாகரனுக்கு அவர் சொல்லி விட புன்னகை தான் ஆயுதம். சொல்லில் தைத்த முள்ளைப் புன்னகை எடுத்து விடும். என்றைக்கும் சிணுங்காத முகம்.

ஜே.பியில் சொருகிக் கொண்டேன். அப்புறம், சாவ காசமாகத் தனி நேரத்தில் ருசி பாார்க்க வேண்டிய விஷயம்.

"இந்தக் கடிதாசுக்கு... Clo கருணாகரன், கலியாணி பாத்திரக்கடை, சாலை, திருவனந்தபுரம் என்று தானா கவே வர எப்படித் தெரிந்தது?"

'உங்கள் மகனிடமிருந்து, உங்கள் இருப்பிடம் விசாரிச்சு இந்தக் கடிதத்துக்கு முன்னால் ஒரு எழுத்து எனக்கு வந்தது.

எனக்குத் தெரிஞ்ச நிலவரத்தை, இதுமாதிரி மூணு மாதம், அறு மாதத்துக்கு ஒரு முறை நீங்கள் கடைக்கு வந்து போவிர்கள் என்று எழுதினேன்.”