பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

படிரென்று கதவு திறந்து கொண்டது. அவன் மேல் கூட, எடுத்தவுடன் என் கண் விழவில்லை, பின்னாலேயே ஒரு உயிர் ஸெலுலாயிடு பொம்மை, என் கவனத்தை ஈர்த்துக் கொண்டது.

  • 'ஹல்லோ டாடி! ஹெள டி? மீட் லூலூ சப்தித் தான.

கான் மதுரத்தைப் பார்க்கிறேன். அவள் முகத்தில் ஒரே சமயத்தில் குழுமும் வேதனை, விநயம், குற்றம், செயலாகாத் தன்மை-காண சகிக்கவில்லை. வருகிற வெள்ளிக்கிழமை பெண் பார்க்கும் படலம் என்று சொன் னாயே! அது பஜ்ஜி ஸொஜ்ஜி வரை தானோ? அதை அங்கே போய்த்தின்னால் தான் ஆகுமா? எப்பவுமே அது ஒரு ஃபாஷன். அதையும் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக் கிறது இந்த இளைய தலைமுறை. என்னைப் புரளி செய்வதற்கென்றே மெனக்கெட்டு அழைத்து வந்தார்களா?

எதைக் கண்டும் ஆச்சரியப் படலாகாது. இதுதான் இனி நீ கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். தேற வேண் டிய சோதனை. கடிதம் போட்டால் வர வேணுமா? வந்தாய், படுகிறாய். படுவதும் உன் குற்றம் தான். இது போன்ற மூக்குடைப்பில்தான் தன் நரம்பு பலத்தை இளைய பாரதம் எங்கள் மேல் பரிசிலித்துக் கொள் கிறது.

'ஹாய்' மிஸ் லூலு கை குலுக்கக் கை ப்ேடினாள். நான் கை கூப்பினேன். இந்த அரை அங்குல அரிதாரத்தின் அடியில் உன் முகத்தின் உண்மை உரு என்ன மிஸ் லூலு?

அப்புறம் தான் அவன் உர்ஸைப் பார்த்தான்.

"மிஸ் உர்ஸ்-சவவா ஜியார்ஜ்-மிஸ்டர் ஷ்யமந்த்.”