பக்கம்:கேள்வி நேரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


அமுதா : பழனிக்குப் போயிருக்கிறேன். ஆனால், படிகளை எண்ணிப் பார்க்கவில்லை.

கவிதா : 500 படிகள்.

ரங்கநாதன் : இல்லை. 600 படிகள்.

திலக: என்ன ராமச்சந்திரா, உன் விடை என்ன? எழுநூறா?

ராமச்சந்திரன் : தெரியவில்லை. நீங்களே கூறி விடுங்கள்.

திலக : 648 படிகள். படி வழியாக ஏற முடியாத வர்களுக்காக ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார்களே, அது என்ன?

ரங்கநாதன் : மின்சாரத் தொட்டில்.

திலக: ஆம், விஞ்ச் (Winch) என்று அதை ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். இதோ இருக்கிறதே, இது ஒரு தேசத்தின் கொடி. எந்த நாட்டுக் கொடி என்று கூற முடியுமா?

கவிதா : பாக்கிஸ்தான் கொடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/71&oldid=494075" இலிருந்து மீள்விக்கப்பட்டது