உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கைதி எண் 6342.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

நான் மருத்துவ மனையிலே இருந்தபோது, என்னை வந்து பார்த்தனர். வெற்றி நிச்சயம் என்றும் கூறினர். என்றாலும் "பெரிய புள்ளிகள்" வேலை செய்து, நிலைமைகளைத் தலைகீழாக மாற்றிவிட முடியுமல்லவா—ஆகவே, என்ன ஆகிறதோ என்ற கவலை, மனதைப் பிய்த்தபடிதான் இருந்தது. ஆரணியில் வெற்றி கிடைத்தது என்ற செய்தியை இதழில் படித்த பிறகு மகிழ்ச்சி உறுதியாயிற்று. காஞ்சிபுரத்தைப்பற்றியும் ஐயம் கொள்ளவேண்டிய நிலை இல்லை. என்றாலும், காங்கிரஸ்காரர்கள் பொதுத்தேர்தலில் கையாண்ட முறைகளைக் கொண்டு, ஏதாவது செய்துவிடுவார்காளோ என்ற அச்சம் ஒருபக்கம் இருந்துகொண்டிருந்தது. இதழில் வெற்றிச்செய்தி கண்டபிறகு, புதிய உற்சாகம் பிறந்தது.

நான் 'பரோலில்' காஞ்சிபுரத்தில் இருந்தபோது, நமது கழகத்தோழர்கள் என்னிடம் இம்முறை கழகம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று எழுச்சியுடன் கூறினார்கள். இப்போது நமது கழகத்தவர் நால்வர் உறுப்பினராக இருக்கிறார்கள்—அதிகம் வேண்டாம், இந்த முறை எட்டு கழகத்தவர் உறுப்பினரானாலே போதும், அதுவே பெரிய வெற்றி தான் என்று நான் சொன்னேன். நண்பர் சபாபதி, "எட்டா? அதற்கு மேல் வெற்றி கிடைத்தால் என்ன தருகிறீர்கள்?" என்று 'பந்தயம்' பேசினார். "நூறு ரூபாய் விலையில் ஒரு கைக்கடிகாரம் தருகிறேன்." என்று கூறினேன். நூறு ரூபாய்ச் செலவு வந்துவிட்டது!!

இதனை இங்கே நண்பர்களிடம் சொன்னபோது, 'வாங்கித் தரவேண்டியதுதான்!' என்று கூறினார்கள். செலவு, எனக்கல்லவா, இவர்களுக்கு என்ன? வெகுதாராளமாகச் சொல்லிவிட்டார்கள்!

காஞ்சிபுரத்தில் வெற்றிக்காகப் பாடுபட்ட நமது தோழர்கள் அனைவருக்கும், நான் நன்றிகூறிக் கொள்கிறேன்.

அமைச்சர் பக்தவச்சலம், தம்முடைய ஆதீனத்தில் உள்ள ஊர்களிலே ஒன்று என்று காஞ்சிபுரத்தைக் கருதிக் கொண்டிருக்கிறார். அங்கு நகராட்சிமன்றம் கழகத்திடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/157&oldid=1584351" இலிருந்து மீள்விக்கப்பட்டது