160
கனவே செய்யப்பட்ட ஒரு 'ஏற்பாடு' என்று கருதக்கூடிய ஒரு நிலை! இது எனக்கு என்னமோ போலிருந்தது—சில குத்துச்சண்டை—குஸ்திச்சண்டை—ஆகியவைகளில், வெற்றி—தோல்விபற்றி முன்னதாகவே 'ஏற்பாடு' செய்து கொள்வார்களாமே! அது போல ஒரு தோற்றமளிக்கிறது—கைலாயத்தில் பேசிக்கொண்டு பூலோகத்திலே வாதப்போர் நடத்தியது. குமாரிலபட்டரும்—மண்டன மிசிரரும், குமரன், பிரமன் என்று இல்லாமல், மார்க்கத் துறையில் வேறு முறைகளை ஆக்கிய ஆசான்களாக மட்டுமே இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றிற்று.
ஆனால், எல்லாவற்றுக்கும் தத்துவார்த்தம் ஏதாகிலும் எடுத்துக் கூறப்படக்கூடும், குமாரிலபட்டரும்—மண்டன மிசிரரும் இரு பேரறிவாளர் என்று மட்டும் இருந்திருப்பின், கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியின் நேர்த்தி மேலும் எடுப்பாக இருந்திருக்கும் என்பதனைத்தான் சொல்கிறேன். முருகனையும் பிரம்மனையும் சிவனார் வாதத்தில் வென்றார் என்பதிலே வியந்திடவோ, பெருமைப்படவோ என்ன இருக்க முடியும். ஜயஜய சங்கர என்ற இந்தத் தொடர் கட்டுரையில், மிக உருக்கமான பகுதியாக எனக்குப் பட்டது—சங்கரருக்கும் அவருடைய அன்னைக்கும் நடக்கும் உரையாடல் பகுதி. என் சிற்றன்னையின் நினைவு வந்துவிட்டது. காஞ்சிபுரம் நகராட்சிமன்றத் தலைவராக அ. க. தங்கவேலர் வந்திருப்பதில் தொத்தா எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார்கள்—மகிழ்ந்திருப்பார்கள் என்பதை எண்ணிக் கொண்டேன். ஒவ்வொரு மாலையும், மணிக்கணக்கில், தொத்தா 'அரசியல்' பேசுவது தங்கவேலரிடம்தானே! தங்கவேலர், நகராட்சிமன்றத் தலைவரானபோது, 'தொத்தா' இருக்கமுடியாமற் போய்விட்டதை எண்ணி வருத்தப்பட்டேன்.
20—3—64
இன்று காலையில், போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். டாக்டர் சத்திய நாராயணா அவர்கள் என்னைப் பரிசோதிப்பதற்காக அந்த