215
பணியாற்றிக்கொண்டு வருகிறார்கள் என்பதை அறிந்து அகமகிழ்கிறோம்—அதேபோது, உடன் இருந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் வாட்டுகிறது. இன்று நண்பர்கள், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இடத்திலே வழக்குகள் முடிவு பெறாததால், காவலிலே மாதக்கணக்காக அடைபட்டுக் கிடக்கும் மதுரை முத்து, கோவிந்த சாமி போன்ற நண்பர்கள் பற்றி மிகுந்த கவலை தெரிவித்தார்கள். தூத்துக்குடியில் நடைபெற்றதுபோல, விரைவாக வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று எங்களைப் போலவே, பலரும் கருதத்தான் செய்வார்கள்.
அறுபது வயதுக்கு மேலான முதியவர்—குடும்பம் நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுபட முடியாத நிலையில், ஊரூராகச் சுற்றி, சாமான்களை விற்பனை செய்யும் வேலையைச்செய்து, உடல் இளைத்து, உள்ளம் வாடி, ஆவி சோர்ந்துபோகும் கட்டத்தில் இருக்கிறார். இரண்டு பிள்ளைகள்--- —முப்பது, முப்பத்தைந்துவயதில், குடும்பத்தை நடத்திச்செல்லும் பொறுப்பில் அவர்கள் இருவரும் வெற்றி காணவில்லை. தகப்பனோ பிள்ளைகள், மணிமணியானவர்கள், குடும்பத்தை மிக மேல் நிலைக்குக் கொண்டுவரத்தக்க அறிவாற்றல் படைத்தவர்கள் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை சிதையும் நிகழ்ச்சி ஏற்படுகிறது—மனமுடைந்து மாண்டுபோகிறார்.
நெஞ்சை உருக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள, இந்தக் கருத்துவிளக்க ஆங்கில ஏடு ஒன்று படித்தேன்.
இதுபோல், தமிழகத்தில், பல்லாயிரக்கணக்கில் தகப்பன்மார்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமைகளைப்பற்றி எண்ணிக்கொண்டேன். நொந்த உள்ளத்துடன், படுத்துப் புரண்டபடி இருந்தேன்—நெடு நேரம். இன்றிரவு தூக்கம் பிடிக்கவில்லை.
மகன் உதவாக்கரையாகிவிட்டான் என்று மனம் நொந்து வெகுண்டு, தகப்பன், மகனை ஏசுகிறான். மகன், கண்ணீர் சிந்துகிறான். அந்தக் கண்ணீரைக் கண்டதும், தகப்பனுக்குக் கோபம் எங்கோ பறந்து போய்விடுகிறது. என் மகன் அழுகிறான்! எனக்காக அழுகிறான்! என் நிலைமை