பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93



பெருஞ்சேரல் இரும்பொறை, தன்மேல் 8-ஆம் பத்துப் பாடிய அரிசில் கிழாருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தான். (அரசில் கிழார் காண்க.) இவன், மோசிகீரனார் என்னும் புலவரைப் போற்றினான். அப்புலவர் இவனுடைய அரண்மனையில் சென்று இவனைக் கண்டார். கண்டபிறகு, அரண்மனையில் இருந்த முரசு வைக்கும் கட்டிலின்மேல் படுத்து உறங்கிவிட்டார். முரசு கட்டில் புனிதமாகக் கருதப்படுவது. அவர் அதன்மேல் படுத்து உறங்குவதை தற்செயலாகக் கண்ட அரசன், அரண்மனைச் சேவகர் இதனைக் கண்டால் புலவருக்குத் துன்பஞ் செய்வார்கள் என்று கருதி, அவ்வாறு நேரிடாதபடி தான் அவர் அருகில் நின்று கவிரியினால் வீசிக்கொண்டிருந்தான். விழித்துக் கொண்ட புலவர், நடந்ததையறிந்து தம்முடைய செயலுக்குப் பெரிதும் வருந்தினார். அரசனுடைய பெருந்தன்மையைப் புகழ்ந்து பாடினார். (புறம். 50). அச்செய்யுளின் அடிக்குறிப்பு, சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை முரசு . கட்டில் அறியாதேறிய மோசிகீனாரைத் தவறு செய்யாது அவன் துயிலெழுந்துணையும் கவுரிகொண்டு வீசியானைப் பாடியது” என்று கூறுகிறது.