பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


பாண்டியன் முசிறியிலிருந்து கொண்டு போன படிமம், சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகியின் பத்தினிப் படிவமாக இருக்கக்கூடும் என்று எளங்குளம் குஞ்சன் பிள்ளைதாம் மலையாள மொழியில் எழுதிய கேரளம் அஞ்சும் ஆறும் நூற்றாண்டுகளில்' என்றும் நூலில் எழுதுகிறார். அது கண்ணகியின் படிவமாக இருக்க முடியாது, வேறு ஏதோ படிமமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. குஞ்சன் பிள்ளையின் கருத்தை இந்து சூடன் அவர்களும் மறுத்துக் கூறுகிறார்.[1]

குளமுற்றத்துத் (குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்குநாட்டின் தலைநகரத்தை முற்றுகையிட்டு வென்றதும், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரநாட்டு முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு வென்றதும் ஆகிய நிகழ்ச்சிகள், அக்காலத்தில் சேரநாட்டிலும் கொங்கு நாட்டிலும் சேர அரசர்கள் வலிமை குறைந்து இருந்தார்கள் 'என்பதைத் தெரிவிக்கின்றன. சேரன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு சேர அரசர்கள் பலமில்லாதவர்களாக இருந்தார்கள் என்பது தெரிகின்றது.

யா.க.சே. மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பு கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறை, சோழ நாட்டு இளஞ்சேட். சென்னியை வென்றான் என்றும் சதுக்கப்பூதர் என்னும் தெய்வங்களைத் தன்னுடைய தலை நகரத்தில் கொண்டுவந்து அமைத்தான் என்றும் அறிந்தோம். அந்தப் பூதங்கள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த பேர் போன பூதங்களாக (தெய்வங்களாக) இருக்கக் கூடும். அந்தத் தெய்வ உருவங்களை இளஞ்சேரல் இரும்பொறை அங்கிருந்து கொண்டுவந்து தன் நாட்டில் அமைத்துத் திருவிழா செய்தான்,


  1. * p. 82-34 The Secret Chamber V.T. Indo chudan 1969,