பக்கம்:கொடி முல்லை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 15


கலம்பாடி நண்பன் அழகனுக்குத் தன்னுயிரைக்
கொடுத்தான். தப்பிய அழகன் தன் தோகை மணல்
வெளியில் இறந்திருக்கக் காண்கிறான்.

றுப்பாடை அணிந்தழகன் கழுவிற் கேகக்
காத்திருந்தான்; அவ்வேளை படையைச் சேர்ந்த
நிறத்தாடை உடுத்தொருவன் சிறைக்குள் வந்தான்;
'நேரத்தைக் கடத்தாதே; உடையை மாற்று;
புறப்பட்டுப் போவெளியில்; குதிரை யுண்டு;
புலவன்உன் வழிபார்த்துக் காத்தி ருப்பான்;
மறுக்காதே; காதலியை மீட்கச் செல்! செல்!
என்றுரைத்தான் வாயோடே! அழகன் மீண்டான்.

'தெருநடுவே இந்நேரம் அழகன் அந்தோ!
செத்திருப்பான்' என்றுபலர் பேசக் கேட்டுச்
சிரித்திட்டான் நலம்பாடி வாழும் இல்லத்
திசைநோக்கி மாற்றுருவில் வரும்கற் றச்சன்!
இருள்கிழிக்கும் கழுவேற்றும் அறிவிப் போசை!
தனக்காக இறந்தவனை எண்ணி எண்ணி
இருபடையின் இடைப்பட்ட மாற்றான் போல
நலம்பாடி இல்லத்தை அழகன் சார்ந்தான்.

வீடெல்லாம் தாழ்குரலில் 'நண்பா! நண்பா!'
என்றழகன் விளித்திட்டான்? பதிலே இல்லை!
கூடத்தைக் கடந்தோடித் தோட்டம் சுற்றிக்
கூப்பிட்டான்; பதிலில்லை! திரும்பி வந்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/46&oldid=1253097" இலிருந்து மீள்விக்கப்பட்டது