பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 கொய்த மலர்கள் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் சாதி, சமய, நீதி, நிற. நாட்டு வேறு பாடுகளை எல்லாம் கடந்து வாழ்ந்தவர். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகில் மனிதர் மட்டு மன்றிப் பிற எல்லா உயிர்களுமே சமம் என்ற உண்மையை நாட்டுக்கு உணர்த்தியவர் அவர். அவர் பாடிய பாடலே * திருக்குறள்' என்பது. குறுகிய இரண்டு அடிப்பாடல் களாலே அவர் உலகம் என்றென்றைக்கும் தீமை அற்று நலம் பெற்று வாழும் வழிகளையெல்லாம் விளக்கிக் காட்டி இருக்கிறார். அவர் காட்டிய வழியில் உலகம் சென்றால், உலகில் என்றைக்குமே கொடுமை தலைக்காட்டாது. அப்படிக் காட்டினாலும் அக்கொடுமை வாழாது உடனே அழிந்து விடும். திருக்குறள் 1330 குறட்பாக்களில் உலகம் வாழ வழி கண்டார். அவர் குறள் மூன்று பகுப்பாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை அறம், பொருள். இன்பம் என்பன. இவை மூன்றும் தாம் உலகில் உள்ளன, இவையன்றி வேறு எது? வாழ்வில் பெறக்கடவன இவையே. அறநெறி பற்றி நின்று, அந்த அறவழியால் பொருளைப் பெருக்கி, அப்பொருளின் துணையால் கருத் தொருமித்த காதலாகிய இன்பவாழ்வில் வாழ்வது தானே சிறந்தது. ஆம். இந்த மூன்று உண்மைகளையும் அவா நன்றாகத் தெள்ளத் தெளியக் காட்டி விட்டார். இவற்றுள் முதலில் உள்ள அறம், பொருள் இரண்டையும் தமிழ் நாட்டுப் பிற புலவர்களும் பிற நாட்டுப் புலவர்களும் ஓரளவு விளக்கியிருக்கிறார்கள். என்றாலும், அவர் கடைசி யாகக் காட்டியுள்ள இன்பவாழ்வை உலகில் யாரும்எந்தப் புலவனும் - இதுவரை அவரைப்போல் காட்ட வில்லை. இனியும் காட்ட இயலாது என எண்ணுகிறேன். இத்தகைய காதல் வாழ்வைக் காட்டிய வள்ளுவரைப் பெற்ற தமிழ்நாடு சிறக்க என வாழ்த்துகிறேன்.