பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 கொய்த மலர்கள் மிகச் சிலரே. இவற்றையெல்லாம் எண்ணித்தான் எண்ணித் திருவள்ளுவர். . மலரினும் மெல்லிது காமம், சிலர் அதன் செவ்வி தலைப்படு வார் (1289) எனக் காட்டுகின்றார். இத்தகைய மென்மையான காமத்தின் தலை நிற்கும் காதலர் வாழ்வைப் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகின்றார் வள்ளுவர். இக்காலத்தில் 'கண்டதும் காமம்; உடனே விவாக ரத்து' என்று பேசப்படுவது போன்ற 'நாகரிகக் காமம்' வள்ளுவர் காணாதது, அவர் காட்டும் காமவாழ்வு வழி வழியாகப் பலப்பப் பிறவிகளில் தொடர்ந்து வருவது. வள்ளுவர் மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவர். முன்னைப் பிறவிகளை எண்ணுபவர். எனவே இக்காதல் வாழ்வு திடீரென ஒரே பிறவியில் ஏற்பட்டு விட்டது என அவர் எண்ண வில்லை. இக் காமமாகிய கட்டு, பல பிறவிகளில் ஒருவரை ஒருவர் பற்றி வருவதாகக் காட்டுகின்றார். இதை மிக நுணுக்கமாக அவர் விளக்கும் திறன் போற்றற்குரியது. ஒரு தலைவன் தலைவியின் உள்ளத்தை நிறைவித்து அவளுடன் கூடி மகிழ்கின்றான். அந்த மகிழ்ச்சியில் அவளைப் போற்றிப் பாராட்டுகின்றான். அவளை விட்டுப் பிரிய மனம் இல்லை அவனுக்கு. அவள், தான் மாறுபட்ட தாகக் கருதி ஒரு வேளை புலத்தல் செய்வாளோ என அஞ்சு கிறது அவன் உள்ளம். எனவே, அவன் ' இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரிய மாட்டேன்' என்கின்றான். உடனே • அவள் அழுதாள்' எனக் குறிக்கின்றான். ஏன் அழுதாள்? * அப்போது மறுமையில் பிரிந்து விடுவீர்களோ. என எண்ணுகிறது அவள் உள்ளம், ஆகவே ஒரு முறை காதல் வயத்தால் கலந்த இருவர் இந்தப் பிறவியில் மட்டுமின்றி எந்தப் பிறவியிலும் பிரியாது வாழ வேண்டும் என்பது