பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொய்த மலாகள்

போன்று அவர்கள் அன்று அத்துணை மெல்லிய ஆடைகளை நெய்தார்களாம். இன்னும் பாம்புதோல் உரித்தது. போன்ற பல வண்ணக் கண்கவர் ஆடைகளையும் அவர்கள் நெய்தார்கள் எனக் காண்கின்றோம்,

‘பாலாவியன்ன மேடை நெய்வோர்' என்றும்,
பாம்பு உரித்தன்ன அறுவை நல்கி' என்றும்,

பழம் பெரும் இலக்கியங்கள் பாராட்டுகின்றன .

பிற்காலத்தில், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் 'காம்பு, நேத்திரப்' போன்ற அழகிய கரை வேலைப்பாடமைந்த ஆடைகள் தமிழ் நாட்டில் செல்வரால் விரும்பிப் போற்றப் பட்டமையைக் கூறுகின்றார். இத்தனையும் கையால் நெய்யட்பட்டனவேயன்றி வேறு: வகையாக வளர்ந்திருக்க முடியாது எனவே கடைச் சங்க காலத்துக்கு முன் தொடங்கி-மோகன்சோதாரோ ஹாரப்பா காலமாகிய இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து இன்றுவரை, பலப்பல வகையில் பலப்பல முறைகளில் வண்ண ஆடைகளையும் மெல்லிய ஆடைகளையும், பட்டிலும் மயிரிலும் பருத்தியிலும் கைத்தறி வழி நெய்து வந்த நம் நாட்டுச் சமுதாயம் இன்றும் அத் தொழில்துறையைப் போற்றிப் பாராட்டுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். என்றாலும், இன்னும் அந்தப் பழங்காலத்து மக்கள் நெய்தது போல மெல்லிய-மிக நுண்ணிய-வண்ண ஆடைகளை இன்றைய மக்கள் நெய்யக் கற்றுக் கொண்டார்கள் என்று எண்ண முடியவில்லை. காரணம் எத்தனையோ உள. ஒன்று இன்றைய கைத்தறித் தொழில் 'மில்லோ'டு மல்லாட வேண்டியுள்ளது. ஆனால் அது தவிர்க்க முடியாத ஒன்று, நாகரிகம் நமக்குத் தேடித் தந்த விலக்கமுடியாத தொல்லைகளுள் அதுவும் ஒன்று .

ஆங்கிலேயேர் ஆட்சிக்கு வருமுன் இந்திய நாட்டு டாக்கா மஸ்லீன்' மிகச் சிறந்ததாகப் போற்றப்பட்டு