பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

126 கொய்த மலர்கள் ' எனவே உரையாசிரியர்கள் காலத்தே வடசொல் என்பது ஆரியச் சொல் எனப் பெயர் பெற்றது. அதுவே பின் சமஸ்கிருதமாகக் காட்டப்பெறுவது என விளங்கும். எனினும் 'ஆரியச் சொல் போலும் சொல்' என்ற இளப் பூரணர் உரையையும் பிராகிருதத்தைச் சேர்த்த தெய்வச்சிலையார் உரையையும் எண்ணிப் பார்கக வேண்டும். உரையாசிரியர்கள் காலம் பிற்காலச் சோழர் காலம். அக்காலத்தில் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழிக்கு ஏற்றம் உண்டாயிற்று என வரலாறு காட்டுகின்றது. எனவே அக்காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர் கள் அவர் தம் காலத்தை ஒட்டி அவ்வாறே உரை எழுதி மேற்கோள் காட்டிச் சென்றார்கள். எனினும், சிந்திப்பின் ஓர் உண்மை புலப்படும் என்பது உறுதி. வடமொழி என்பது தமிழ்ச்சொல்; தமிழகத்துக்கு, வடக்கே உள்ள ஒரு மொழியை இது குறிக்கும் எனலாம். தமிழ்நாட்டு வடஎல்லை சங்க காலத்திற்கு முன்பிருந்தே வேங்கடமாக அமைந்துள்ளதை நாமறிவோம். சங்க இலக்கியங்களிலே, பனிபடு சோலை வேங்கடத்து உம்பர் மொழிபெயர் தேயம் (அகம் 211) என்றும் • தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே (அகம் 31) என்றும், * குல்லைக்கண்ணி வடுகர் முனையது வல்வேற் கட்டி நன்னாட்டு உம்பர் மொழி பெயர் தேஎத்த ராயினும் ' (குறுந் 11) என்றும்,