பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

130 கொய்த மலர்கள் சிறந்த உயர்ந்த பெரியோரையும், அழகையும், பிற உடலுக்கும் உயிருக்கும் நலம் தரும் பொருள்களையும் குறித்தது எனலாம். ஒருவேளை வடவாரியார் தென்னாட் டுக்கு வந்தபோது இரு சொற்களையும் இணைத்து ஒன்றாக்கி விட்டார்களோ என்று கொள்ள இடம் உண்டாகிறது. எனவே தமிழில் வழங்கும் ஆரியர், ஆரியம் என்ற சொற்கள் தமிழில் உள்ள 'அரிய' என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றி உயர்ந்தவரையும் உயர் பொருளை யும் குறிப்பன என்று கொள்ளல் வேண்டும். தமிழில் தொல்காப்பியர் கால முதற் கொண்டே-ஏன் - அதற்கு முன் இருந்துங்கூட அறிவர். தாபதர் போன்ற நல் உணர் வாளர் இருந்தார்கள் என அறிகிறோம். அவர்கள் *பொன்னே கொடுத்தும் புணர்வற்கு அரியராய் இருந்த தோடு' அவ்வப்போது மக்களுக்கு அறம் உணர்த்தும் ஒழுக்க சீலராய் விளங்கினார்கள் எனவும் காண்கிறோம். அவர்கள் வாழ்வு சற்றுத் தனிப்பட்ட முறையில் அமைந்து, தனி இடத்திலிருந்து எண்ணும் பண்பாட்டில் தலை சிறந்த தாக விளக்கியிருக்கும் என்பதைத் தொல்காப்பியம் முதலியவற்றால் அறிகின்றோம். எனவே தமிழ் நாட்டு அரிய ராகிய அறிவரே 'ஆரியர்' எனப்பட்டார் என்பது பொருந்தும். இந்த ஆரியர் மிகப் பழங்காலந்தொட்டுவடநாட்டு ஆரியர் சிந்துவெளிக்கு வருவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - தமிழ் நாட்டிலும் தமிழ் வழங்கிய பரந்த இந்தியப் பெருநிலத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும். இனி, பின் இந்திய நாட்டுக்கு வாழ்வு வேண்டி வந்தவர் களாகிய ஓர் இனத்தாரும் தம்மை ஆரியரென்று கூறிக் கொண்டிருப்பதில் தவறில்லை. அவர்கள் எதனால் அப் பெயரிட்டு அழைத்துக் கொண்டார்கள் என்பதை இன்று நம்மால் காண இயலாது. எனினும் அவர்களைத்