பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

கொய்த மலர்கள்

சிறந்து போற்றப்பட வேண்டிய ஒன்றாகும் இன்றும் வாழ்கின்ற பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் ஐம்பதுக் கும் மேற்பட்ட பல நாடகங்களை எழுதியுள்ளார்கள். எனினும் அவையெல்லாம் காலம் கடந்து வாழவில்லை எனலாம். ஒரு சில நாட்டில் நடிக்கப் பெறுகின்றன.

தற்காலத்தில் வானொலியின் மூலமும் தமிழ் நாடகம் ஓரளவு நடைபெற்று வருகின்றது. என்றாலும் அரசாங்கம் அத்துறையில் இன்னும் அதிகமாகக் கருத்திருத்த வேண்டும் என்று கூறுவேன். தமிழ் நாட்டுப் பண் பாட்டு அடிப் படையில் அமைந்த நாடகங்கள் அங்கே அதிகமாக இடம் பெறாத காரணத்தால் தமிழ் மக்கள் அவற்றை ஒதுக்கு கிறார்களோ என எண்ணவேண்டி யுள்ளது. தக்கவர் களைக் கொண்டு, நல்ல நாடகங்களை எழுதுவித்து. நல்ல நடிகர்களைக் கொண்டு அவற்றை நடிக்க ஏற்பாடு செய் தால் வானொலி வழி நாடகங்களை நன்கு வளர்க்க வாய்ப்பும் வசதியும் உள்ள ன.

நாடகம், இலக்கியமாக அவ்வளவு நல்ல முறையில் தமிழில் இன்று வளரவில்லை. எங்கோ ஒரு சில புலவர்கள் சிறு சிறு நாடகங்களை எழுதுகிறார்கள் என்றாலும் சிறு கதை. நாவல்கள் போன்று நாடகம் வளரவில்லை என் பதை நாட்டில் இன்று வெளியாகும் நூல்களின் பட்டியல் நன்கு காட்டுகின்றது. பல அறிஞர்கள் இத்துறையில் கருத்திருத்த வேண்டுமெனக் கேட்கின்றேன்.

இவ்வாறு இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்- தொல்காப்பியனார் காலத்துக்கு முன் தோன்றிய நாடகத் தமிழானது இடையிடையே நலம் கெட்டாலும் இன்று நிலை தளர்ந்திருந்தாலும்- மறையாது வாழ்ந்து வளர்ந்து வருகின்றது என்பது கண்கூடு. சில நல்ல முறை யில் நடிக்கப்பெற்றும் சில பயிலப் பெற்றும் வருகின்றன. இன்னும் தமிழ்நாட்டு நாடக மேடையைப் போற்றுபவர் அற்று விடவில்லை. இன்று தமிழ் நாட்டில் உண்டாகி யிருக்கும் நல்ல விழிப்பு இந்தக் கலையை மேன்மேலும் வளர்க்கும் என்ற நம்பிக்கையோடு அமைகின்றேன்.