பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்க காலச் சைவம் அருந்திறல் கடவுள் வாழ்த்தி, சிறிது நும் கருங்கோட்டுக்கு இன்னியம் இயக்கினிர் கழிமின் (பெரும். 388-92) என்று உருத்திரங் கண்ணனார் நன்கு எடுத்துக் காட்டு கின்றார். அவருடைய பெயரே அவர் சிவனிடம் நீங்காத ஈடுபாடு உடையவர் எனக் காட்டுகிறது. எனவே அவருடைய பாடல்களில் சிவனைப் பற்றிய குறிப்புக்களையும் காண முடிகின்றது. இவ்வாறு கடவுள் தங்கும் இடங் களுக்கு அக்கடவுள் பெயரையே இடும் வழக்கமும் உண்டு. மலை வளம் பாடிய பெருங்குன்றூர்க் கிழார் இவ்வாறு ஒரு காடு இருந்ததைக் 'கடவுள் பெயரிய கானம்' (பதிற் 9) என்றே காட்டைக் காட்டுகின்றார். இவ்வாறு எல்லையற்ற ஆண்டவனைக் கற்றார் மட்டுமன்றிக் கல்லாரும் கண்டு உணர்ந்து போற்ற வேண்டி எல்லை யிட்ட இடத்திலே அமைத்து வழிபட அன்றைய தமிழ் மக்கள் தொடங்கி விட்டனர் என அறிகின்றோம். இனி அவர்கள் வழிபட்ட முறைகளுள் ஒன்றிரண்டு கண்டு மேலே செல்லலாம். வழிபாட்டு முறைகள் கடவுளுக்குப் பலியிட்டுப் பணிகின்ற வழக்கம் இருந்தது என அறிகிறோம். முருகனுக்கு மறி அறுத் தார்கள் எனத் திருமுருகாற்றுப்ட டையே குறிக்கின்றது. இவ்வாறு பலியிட்டுப் பரவிய வணக்கத்தையும், அவர் கள் அவ்வாறு பலியிட்டு ஆற்றிய வழிபாடு அச்சத்தின் பாற்பட்டது என்பதையும், • கணங்கெழு கடவுட்கு உயிர்ப்பலி தூவிப் பரவினம் வருகம் சென்மோ தோழி' (நற் 358) என்ற நற்றிணை அடிகள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. கொ . ம. 4 -