பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 கொய்த மலர்கள் எனவே, கடவுள், இயவுள் என்ற இரண்டு சொற்களும் அவனது இரண்டு எல்லைக்கோடுகளை விளக்க வருகின்றன வாக அமைகின்றன. தெய்வம் என்ற சொல் சங்க காலத்தில் நன்கு | வழக்கத்தில் உள்ளது. இச் சொல் தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இச் சொல் தெவ்வம் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு. தெவ் என்ற சொல்லுக்குக் கடவுள், கொலை என்ற இரண்டு பொருள்கள் உள்ளன - உயிர்களில் உள்ள 'தான் என்ற முனைப்பைக் கொன்று இறைவன் அவற்றைத் தன் அடிக்கிழ் கொள்ளுகின்ற பையின் 'தெய்வம்' என்ற சொல்லுக்கு அப்படியே நேர் முகப்பொருள் கொள்ளுதல் பொருந்தும். எனினும் 'தெவ்வு' என்ற சொல்லின் அடியாகவே தெய்வம் பிறந்தது எனக் கொள்ளின் பொருள் சிறப்பதாகும் என நான் கருதுகின்றேன். 'தெவ்வு' என்ற சொல்லுக் குத் தொல்காட்பியர் 'கொளற் பொருட்டே' (தொல் - உரி 49) எனப் பொருள் கூறுகின்றார். எனவே மக்கள் தம்மால் கொள்ள முடியாத உயர்பொருள்களைக் கொள்வதற்காகவும் தமது வாழ்வு செம்மை கொள்வதற் காவும், ‘வேண்டுவார் வேண்டுதே ஈயும்' முழு முதற் பொருளை வேண்டிக்கொண்டார்கள் எனவும், அதனா லேயே 'தெவ்வம்' என்ற பெயராகி, 'தெய்வம்' எனத் தெளிந்த நிலையில் பின்பு சிறக்கப் பெற்றது எனக் கொள் ளல் பொருத்தமானதாகும். அறிஞர் இத்துறையில் இன்னும் நன்கு ஆய்ந்து கருத்திருத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன். நிற்க,