பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொய்த மலர்கள்

வைக்க வேண்டிய தேவையை உணர்ந்திருப்பான். ஆம்! அது தான் நாகரிக வாயிலின் முதற்படி என்று கண்டான். தனித்த மனிதன் சமுதாயமாகச் சேர்ந்து வாழத் தொடங்கிய காலத்தில், 'அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்' என்ற இலக்கணப்படி, அனைவரும் கூடியிருக்கும் இடத்தில் சிலவற்றை மறைத்தல் தான் பண்புடைமையின் அடிப்படையில் அமைந்த நாகரிகம் என்று அவன் உள்ளத்தே உணர்ந்திருப்பான். அந்த உணர்வின் வழியே புறத்துறுப்புக்கள் சிலவற்றையும் பொதிந்து மூடவேண்டிய தேவை ஏற்பட்டது. அந்தத் தேவையே மனிதனை ஆடைவழிப் பற்றி ஈர்த்தது. ஆம்! அந்த ஆடை அணிந்த வரலாறு மனித வரலாற்றிலேயே சிறந்த மைல்கல்லாகும்.

முதல் முதல் ஆடை அணியக் கற்றுக் கொண்ட மனிதன் இன்று நாம் உடுப்பது போன்ற உயரிய ஆடைகளை அணிந்து கொண்டான் என்று கூற முடியுமா? எப்படி முடியும்? எதையோ கிடைத்ததைக் கொண்டு தன் உடலை மூடிக்கொண்டான் எனபது தானே பொருத்த மானதாகும். அதற்கும் பலப்பல மரப்பட்டைகளும் விலங்குகளின் தோல்களும் பயன் பெற்றிருக்கும். மரவுரி என்று பழங்காலத்திய இந்த ஆடையைப் போட்டுக் காட்டுவதை இன்றும் காண முடிகிறதன்றோ! தோலாடை இன்னும் அடியோடு அற்று விடவில்லையே! இப்படி மரத்தாலும் தோலாலும் மானம் காத்த மக்களினம் மெல்ல மெல்லப் பிற ஆடைகளையும் பயன்படுத்தத் தொடங்கியது என்னலாம்.

இந்திய நாட்டு எல்லைக்கு - சிறப்பாகத் தமிழ் நாட்டுக்கு எல்லைக்கு - சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்த மேலை நாட்டவர் ஒருவர் இங்கே ஆடை காய்க்கும் மரங் கள் இருந்தன என்று எழுதிச் சென்றார் எனக் கேள்விப் படுகிறோம். அவர் வியந்து கூறியது பருத்தி ஆடை