பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர்த்துன்பம் உன் துன்பம் 75 நிறத்தாலும், பட்டத்தாலும், பதவியாலும், குலத்தாலும் கோத்திரத்தாலும், கட்சியாலும், வெறியாலும் இன்னும் எத்தனை எத்தனை யோ வகையாலும், மனித இனத்தைத் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டே இருக்கின்றான். மனிதனின் உடல் உறுப்புக்கள் தம்முள் மாறுபட்டு ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்வது போன்ற கொடு நிலைக்குத்தான் மனித சமுதாயம் இன்று சென்று கொண்டிருக்கின்றது. 'உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டாம்' என்று அறிஞர்கள் வருந்தி அறிவுரை கூறும் நிலையில் - உடன் பிறந்தவர் வாழ் வைக் கண்டு பொங்கிப் பொருமிக் கேடு சூழம் அளவுக்கு கலந்து உண்ணக் கண்டீர்' என்று அவனினும் குறைந்த அறிவுடைய பிற உயிர்களைக் காட்டி அவை வாழ்வது போன்றாயினும் கூடி வாழ்' என்று அறிவுரை கூறும் நிலைக்கு மனித சமுதாயம் இழி கிலை அடைந்து விட் டது. சமயத்தால், மொழியால், பிறவகைகளால் நாட் டைத் துண்டாடும் செயல்களை நம் கண்முன்னேயே காண்கின்றோம். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பரந்த நோக்கோடு வாழ வேண்டிய மனிதன் தன் உடன் பிறர்தானையும் வேற்றுக் கண்ணோடு நோக்கப் பழகி விட்டான். ஆம்! இன்றைய மனிதன் தன்னை மறந்து - மனிதப் பண்பினைத் துறந்து- உயிர் அறத்தை அடியிட்டு மிதித்து எங்கோ ஓடிக்கொண்டிருக்கின்றான். இதெல்லாம் மல்லாது வேறு என்ன கூற முடியும்? அருள் ஞானம் கைவரப்பெற்ற நல்லவர்கள் உண்மை யிலே உயிர்களை ஒத்து நோக்கி உலகை உய்விக்க வேண்டு மென எண்ணுகின்றவர்கள் - அவ்வட் போது உலகில் தோன்றி அறநெறியைக் காட்டிக் கொண்டேதான் இருக்