பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 கொய்த மலர்கள் மார்ச்சு 31க்குள் முடியவேண்டும், எப்படி நடக்கும்? ஏதோ நடந்ததாகச் செய்து முடித்துக் காட்டுகிறார்கள் . அதனாலே பலவாறு பயனற்றுப் பொருள் கெடுகிறது. ஐம்பது. நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டிய சிறு பாலங்கள் அப்படியே கெடாதிருக்க, அண்மையில் கட்டிய பாலங் கள் சிறு வெள்ளத்திலும் சிதறுண்டுப் போவதைக் காண் கின்றோம். எனவே இத்தகைய ஆக்கப் பணிகளுக்கு வேண்டிய பணத்தையும் பிற பொருள்களையும் குறைந்தது' ஓராண்டு முன்னமேயே தந்து தொழிற்பட உதவ வேண்டும். எல்லாவற்றையும் விரைவில் செய்து நம் ஆட்சி நாளி லேயே நல்ல பெயர் வாங்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. அது மனித உள்ளத்தின் இயல்பு. ஆனால் அதற்காக அளவற்ற-தேவையில்லாத - பயன்படாத - சரிவர ஆக்க இயலாத பல பணிகளை ஒருசேர எடுக்கத் திட்டம் தீட்டுதல் முறையாகுமா? அதற்காக வெளி நாடுகளில் பல கோடிக்கடன் வாங்குவதும் மக்கள் மேல் தாங்கமுடியாத வரிச்சுமையை ஏற்றுவதும் முறையோ? இப்படிச் சற்றுச் சிந்தித்தால் உண்மை விளங்கும். 1900 கோடி ரூபாய் இதற்குள் அவர்கள் திட்ட வழி செலவழித்தது எங்குச் சென்றதோ?'--என எண்ணித் தயங்க வேண்டியதில்லை. அரசாங்கம் அவ்வாறு பணம் பயனற்றுச் சென்றவிடத்தைக் கண்டுபிடித்து உற்றவ ரூக்குத் தண்டனை அளித்தால் ஓரளவு இனியாவது நேர்மை , யாகச் செயலாற்ற வழி உண்டு. நிற்க, திரு காமராசர் கூறியபடி சென்னையிலும் பிற விடங்களிலும் அரசாங்கம் பல்வேறு வகையில் உதவி, குறைந்த வட்டிக்குப் பணம் தந்து, வீடற்றவருக்கு வீடு கட்டித் தருகிறது, ஆனால் அவர்கள் வாடகைக்கு விட்டும், விற்றும் பொருள் சம்பாதிக்கிறார்கள். இதை