பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கொய்த மலர்கள் சிறிது விட்டுக் கொடுக்க எண்ணாத எல்லைச் சண்டை ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஆயிரம் இழப்பைத் தந்த தோடு. என்றும் அவர்களைப் பிரிந்து வாழவே செய்து விட்டது. இத்தகைய எல்லைப் போராட்டங்கள் ஊர்தோறும் வீடுதோறும் எத்தனை எத்தனையோ நடைபெறுகின் றன. நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. எச்சில் இலை களை எடுத்துப் பார்ப்பதில்கூடப் பிச்சைக்காரர்கள் எல்லைப் போராட்டம் நடத்துவதை நாம் காண்கிறோம்.. அண்மையில் ஒரு வேடிக்கையான-ஆனால் வேதனை தரும்வழக்கு ஒன்று நடைபெற்றது. அதில் வாழ வந்த இடத் திலும் எல்லைப் போராட்டம் நடைபெற்றதைக் காண முடிந்தது. வடநாட்டிலே உத்தரப் பிரதேசத்தில் இருந்த. இரு ஏழைகள் வாழ வகையற்றுத் தமிழ் நாட்டுக்கு வந்தனர். சென்னையில் 'சர்பத்' விற்கும் பிழைப்பு அவர் களுடையது. வண்டியில் வண்ண நீர்களைச் சர்பத்தாக்கி வீதிதோறும் விற்று அவர்கள் வாழ்க்கை நடத்தினர். அவர்தம் குடுப் பங்கள் அங்கே உத்தரப் பிரதேசத்தில், இவர்கள் சர்பத் வாழ்க்கை இங்கே கென்னையில். வாழ வந்த இடத்திலேயும் இந்த எல்லைப் போராட்டம் அவர் களை விடவில்லை. ஒருவன், தான் 'சர்பத்'விற்கும் தெரு வில் மற்றவனை வரவேண்டாம் எனக் கேட்டுக் கொண் டானாம். மற்றவன் அவன் வேண்டுகோளை ஏற்கவில்லை யாம். மனக் கசப்பு வளர்ந்தது. கடைசியில் கொலையில் முடிந்தது. ஒருவன் மற்றவன்மேல் ஏதோ திராவகத்தை ஊற்றினானாம். அது தாளாத மற்றவன் குமைந்து மருர் தாலும் குணமடையாது மாண்டானாம். இதுதான் வழக்கு. வழக்கு முடிவைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாப், வாழ வந்த இடத்திலே --- வயிற்றுக்குக் கஞ்சி தேடி வந்த இடத்திலே-ஏழைகளுக்கும் எல்லைப் போராட்