பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • 96

கொய்த மலர்கள் ஏன் இல்லை? முடிவு காண்பதன் முன் மற்றொன்றும் இங்கு எண்ண வேண்டியுள்ளது. இன்று இந்திய நாட்டு வடஎல்லையில் இந்த எல்லைப் போராட்டம் தலைவிரித்தாடுகிறது. எந்த இருவர் ஒன்று கூடித் தோளோடு தோள் பொருந்த நின்று பாருக் கெல லாம் 'பஞ்சசீலத்'தை உபதேசித்தார்களோ அவர்களே இரு துருவங்களாக இன்று எல்லைப்போராட்டத்தில் கால் வைத்து விட்டனர். சீன நாட்டு மக்கள் இந்திய எல்லையில், கேரள நாட்டு எல்லைபோன்று இருமடங்கு கைக்கொண்டு விட்டனர் எனக் காட்டும் வகையில் வலிய வந்து விட்டனர். இந்திய அரசாங்கம் தன் எல்லையைக் காக்கப் படைபலத்தை அதிகரிக்க வேண்டிய வழியை மேற்கொண்டுள்ளது. சீனாவோ இந்தியா தன் எல்லையில் புகுந்துவிட்டதாக உலக அரங்கில் பேச நினைக்கிறது. எது எப்படியாயினும். பஞ்சசீலம் பேசிய இரு நாடுகளுக்குள் எல்லைப் போராட்டமே தொல்லை தருவதாக அமைந்துவிட்டதே! இந்தியா பாகிஸ்தானுக்கு உரிய எல்லைப் போராட் டம் இன்னும் தீர்ந்துவிடவில்லை. 'காஷ்மீர்' பற்றிய எல்லையின் முடிவினைக் காண முடியாது கடந்த பதின் மூன்று ஆண்டுகளாக இரு சாராரும் திண்டாடுகின்றனர். பம்பாய் மாநிலம் மொழிவழி எல்லைத் தொல்லையால் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்ட பிறகே, இன்று இரு மாநிலங்களாகப் பிரியத் தக்க சூழ்நிலை அமைக் துள்ளது. இவ்வாறு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் கடல்மேலும்- அதற்கு அப்பாலுள்ள வானவெளியிலும்சந்திர மண்டலம் போன்ற பிற அண்ட அமைப்பு களிலும், இத்தகைய எல்லைப் போராட்டங்கள் வளர்ந்து கொண்டே போவானேன்? இவற்றால் மனித அறிவு வளர்கிறது என்று பொருளா? அறிவு என்றால் காணாத