பக்கம்:கொய்த மலர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வள்ளுவர் காட்டிய காதல் நெறி" உலகில் மிகப் பழங்காலங் தொட்டு உயிர்கள் தோன்றி வளர்ந்து வாழ்கின்றன. மனிதன் உலகில் தோன்றியும் பலப்பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. தோன்றிய உயிர்கள் பலவும் அவ்வவற்றின் வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொண்டு, ஏதோ பிறந்ததற்கென வாழவேண்டும் என்ற ஒன்றற்காக, எப்படியோ வாழ்ந்து மறைகின்றன. துன்பத்தின் இடைப்பட்டும் இன்பத்தின் இடைப்பட்டும் தத்தம் வாழ்வை வளமாக்கும் மக்களே பலர். மனிதன் ஒழிந்த பிறவற்றிற்கு "நாளே'யைப் பற்றிக் கவலை இல்லை என்பர் சிலர். ஒரு சிலவற்றின் வாழ்க்கை முறைகளைக் கண்டால் அவையும் காளையைப் பற்றிக் கவலைப்படுவனவாகத் தெரியும். எப்படியாயினும் காளையைப்பற்றிக் கவலையுறுகின்றவர்கள் பெரும்பாலும் தம் வாழ்வைப்பற்றியே கவலையுறுவர். ஒருசிலரே பிற உயிர்களைத் தம் உயிர்போல் ஒத்து நோக்கி, அவற்றின் வாழ்வையும் வருங்காலத்தையும் கணக்கிடுவர். சமு தாயம் ஒருசேர முன்னேறினல்தான் தனி மனிதன் முன்னேற முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவர்கள். அவ்வாறு உணர்ந்த நல்லவர்கள் உலகம் தீமையற்று நல்ல வழியில் முன்னேறச் சிறந்த வழிகளே வகுத்து, அவற்றை உலகமக்களுக்கு உணர்த்துவர். இப்படி உணர்த்தும் நல்லவர் உலகின் பலபாகங்களில் அவ்வப்போது தோன்றியுள்ளனர். அவருளெல்லாம் தலே சிறந்தவர், தமிழ் காட்டில் பிறந்து சாவாத அற. நூலைச் செய்தவராகிய திருவள்ளுவராவர்.

  • கல்கத்தா எழுத்தாளர் சங்க மலர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/107&oldid=812316" இலிருந்து மீள்விக்கப்பட்டது