பக்கம்:கொய்த மலர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கொய்த மலர்கள் செல்வக் காலை நிற்பினும், அல்லற் கால கில்லான் மன்னே" என்று கூறி, வாழ்வில் இன்றேனும் தாழ்வில் உற்றவர் வருவார்கள் என்ற உண்மையை விளக்கினன். நான் இங்கே காட்ட விழைந்தது அவர்தம் ஒருமை உணர்வினையேயாம்; உள்ளும் புறமும் ஒத்த ஒன்றை யேயாம். இருவரும் உணர்ச்சியால் ஒத்த பிறகு அவர்தம் உள்ளும் புறமும் ஒத்ததாகவே அமைவதைக் காணல் வேண்டும். பிசிராங்தையாரை முன்பின் நேரில் கண்டறி யாது போயினும் உணர்ச்சியால் உற்றறிந்த சோழன் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவுறுத்திய ஒன்றே அவர்தம் இருமை உணர்வை இல்லையாக்குவதாகும். கலந்து பழகிய பின்பு இருவரில் எந்த வேற்றுமையைக் காட்டமுடியும்? 'அவனே கான், நானே அவன்' என்று கண் இரண்டும் ஒன்றையே காணும் நிலைபெற்றபின், வேறுபாட்டுக்கு இடம் எங்கே? இங்கே சோழன் தனக்கும் புலவருக்கும் வேறுபாடு கண்டான் இல்லை. இந்த உண் மையைச் சோழன் தன் வாக்காலேயே காட்டுகிருன். தன்பெயர் சிறக்கும் காலை, என் பெயர் பேதைச் சோழன்' என்னும் சிறந்த காதற்கிழமை உடையன், அதன்தலை இன்னதோர் காலை கில்லவன் இன்னே வருவன் ஒழிக்க அவர்க்கு இடமே." (புறம் 316) என்று சோழன் கூறுவதால் நாம் உயர்ந்த பண்பாட்டினை உணர முடிகின்றதன்ருே தன் பெயரைச் சோழன் பெய. ராகவே கொண்டு தமக்குள் வேறுபாடு காணுத அன் புரிமை உடைய புலவர் அச்சோழன் துன்புறுங்கால வாராதிருப்பாரோ வந்து உடன் வடக்கிருந்தாரன்ருே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/138&oldid=812384" இலிருந்து மீள்விக்கப்பட்டது