பக்கம்:கொய்த மலர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் 15.9% கின்றன. இக்காலத்தில் ஊர்தொறும் தெருக் கூத்துக் கள் நாடகமாக நடிக்கப்பட்டதெனவும் அவர்களுக்குக் கிராமத்தார் சிறப்புச் செய்தார்கள் எனவும் காண் கின்ருேம். பிற்காலச் சோழரும் பாண்டியரும் கட்டிய பெரிய கோயில்கள் கலைவளர்க்கும் கூடங்களாக விளங்கின. அக்கலைகளுள் நாடகமும் ஒன்று. - மேலே நாட்டு அறிஞர்கள் தமிழ் நாட்டில் வந்து, தமிழ் பயின்று, அதை வளர்க்க கினைத்த காலத்தில் தமிழில் உரை நடை அதிகமாக வளர்ந்தது. அக்காலத் தில் சில கதைகளும் வளர்ந்தன. அக்கதைகளே ஒட்டி நாடகங்களும் நாட்டில் உலவின. சில கதைகளை நாடகங். களாகவே நாட்டில் எழுதினர் சிலர். அவற்றுள் சிறந்: தது 'இராமங்ாடகக் கீர்த்தனே' என்பது. இது இன்றள வும் வாழ்கின்றது. இராமாயணத்தை அப்படியே நாடக. மாக்கிய நூல் இது. இதுபோன்றே சில வழி நடைப் பதங்களும், கொண்டிச்சிந்துகளும், காவடிச் சிந்துகளும் நாடகங்களுக்கு ஏற்ற பாடல்களாக அமைந்தன. இவைகளை அன்றிச் சென்ற நூற்ருண்டிலும் இந்த நூற். ருண்டிலும் சாதாரணக் கல்வியறிவில்லாத கிராமமக்கள் பலரும் கண்டு மகிழ்ந்து பொழுது போக்குவதற்கு எனப் பலப்பல நாடகங்கள் எழுதப்பெற்று நடிக்கப் பெற்றன. அவை பெரும்பாலும் புராண அடிப்படையில் அமைக். தனவே. நாடகங்களைச் சிறந்த இலக்கியமாகக் கொண்டுவர நினைத்த அறிஞர் சிலர். அவருள் சென்ற நூற்ருண்டு: இறுதியில் வாழ்ந்தவர் சுந்தரம்பிள்ளை அவர்கள். அவர்கள் எழுதிய ‘மனேண் மணியம் இன்றளவும் தமிழ் நாட்டில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. அது செய்யுள் நடையில் இருப்பினும் படிக்கவும் நடிக்கவும் மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப் பெறுகின்றது; நடிப்புக்குச் சில மாற்றங்களைச் செய்துகொள்கின்றனர்; அவ்வளவே. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் கலாவதி, மான விஜயம், ரூபாவதி போன்ற நாடகங்களை எழுதினர்கள். அவர்தம் நாடக இயல் என்ற நூல்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/161&oldid=812435" இலிருந்து மீள்விக்கப்பட்டது