பக்கம்:கொய்த மலர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைப் போராட்டம் 95. டம்தான் தொல்லையாக அமைந்தது என்பதைக் காண முடிகிறது. w இந்த எல்லைப் போராட்டம் தனி மனிதர்களோடு: முடிந்து விட்டிருந்தால் உலக வரலாற்றில் இத்தனே நூல் கள் வெளிவரத் தேவையே இருக்காது. எல்லேக் கோட்டைமீறி வல்லரசுகள் அடிவைப்பதாலேயே உலகில் எல்லாப் போர்களும் உண்டாகின்றன எனக் காண்கி ருேம். உலகில் மனிதன் வாழத்தொடங்கிய நாளிலிருந்தே இந்த எல்லைப் போராட்டம் நடப்பது என்பது நன்கு தெரிகின்றது. அண்மையில் நம் நாட்டில் மொழிவழி' எல்லைப் போராட்டம் தொல்லே தந்ததை அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன் சமயவழியில் எல்லைப் போராட்டம் இந்தியாவை இரண்டு துண்டாக்கியதை அறிவோம். பிற காட்டு எல்லைகளில் புகுந்து புகுந்து வெற்றி கண்ட 'வீரன் ஹிட்லர் வீழ்ந்த வரலாறும் நாம் அறியாததல்ல. காட்டு எல்லைப் போராட்டத்தோடு தொடங்கிய ஆங்கில காட்டு வரலாறு நமக்குப் பழைய பாடம். நிலத்திலும் நீரிலும் தொடங்கிய எல்லைப் போராட்டம் இன்று வான எல்லையில் வளரத் தொடங்கி விட்டது. வாணவெளியை வல்லரசுகளின் ராக்கெட்டு'களும் "ஸ்புட்னிக்'குகளும் வட்டமிடத் தொடங்கிவிட்டன. ஒரு நாடு மற்ற நாட்டைக் காட்டிலும் விரைவில் வானவெளி ஆதிக்கம் செலுத்தத் தொடங்க நினைக்கிறது. தொடங்கி விட்டது என்றும் சொல்லலாம். அதல்ை மற்ற நாடுகள் தம் எல்லையை வானவெளியில் வலியுறுத்த முடிய வில்லையே என வாடுவதையும் காண்கின்ருேம்! ஆம்! இவ்: வாறு மூலை முடுக்குகளில் தனி மனிதன் வாழ்வில் தொடங்கிய எல்லைப் போராட்டம் மண்தாண்டி-கடல் தாண்டி-காற்றினையும் தாண்டி இன்று வான எல்லைவரை யில் வளர்ந்து விட்டது. இதற்கு முடிவே கிடையாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/97&oldid=812613" இலிருந்து மீள்விக்கப்பட்டது