106
எனக்கென்ன குறை, தம்பி! உன் இதயத்தில் எனக்கு இடம் இருக்கும் போது.
பிரிந்து சென்றவர்கள் கொதித்துப் பேசும் போதும் கூட, அவர்களைப் பற்றிக் கடிந்துரைக்காதே—எனக்கு நிச்சயமாக அது பிடிக்காது என்பது மட்டுமல்ல—கனியிருக்கக் காய் கொள்ளற்க என்பது தமிழ் மறை அன்றோ—அது நமது பண்பு எனக்கொள்ள வேண்டும். எனக்கு இன்றும், பிரிந்து போனவர்கள், என்னை இழித்தும் பழித்தும் பேசுவது பற்றிக் கோபம் வரவில்லை; இருந்த நாட்களிலே நிகழ்ந்தவைகளைத்தான் எண்ணி எண்ணி உருகியபடி இருக்கிறேன்; என்ன செய்வது தம்பி! எனக்கு இதயம் இருக்கிறதே!!
3
- கொளுத்தும் வெயில்
- கொட்டும் மழை
- கடுங்குளிர்
- கருக்கல்
- பேய்க்காற்று
இவை எதனையும் பொருட்படுத்தாது, அவர்கள், கருமமே கண்ணாயினர்; பழச்சாறு பருகினர்; பூங்காற்றுத் தேடினர்; புதுப்புனலாடினர்; இசை கேட்டு இன்புற்றனர்; களிப்புத்தரவல்லனவற்றிலே எல்லாம் மாறிமாறி ஈடுபட்டனர், மற்றவர்கள்; அவர்கள், எல்லாம் பெற்றாகிவிட்டது. இனி நமக்குக் குறையேதும் இல்லை, வாழ்க்கை ஒரு இன்பப் பூங்காவாகிவிட்டது; கேட்டது கிடைக்கிறது; தொட்டது மலருகிறது; நினைப்பது நடக்கிறது; இனி நாம் பெற்றவைகளைச் சுவைத்து மகிழத்தான் காலத்தைப் பயன்படுத்த வேண்டும்; கொளுத்தும் வெயில் எனில், குன்றேறிக் குளிர்ச்சி நாடுவோம்; கடுங்குளிர் எனில், கம்பளம் உண்டு, அழகியதாய், வசாதியாய், குளிரைப் போக்கிக்கொள்வோம்.