38
தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொது நலம் நிறைத்திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனையுள்ள எவனும் மக்களால் ஒளிபொருத்திக் காட்டப்படுகிறான்.
"இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறத்திருப்பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப்போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பு தெரித்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாதவர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின்மீது நிற்கின்ற கலைஞர்கள் எந்நாளும் வீழ்ச்சியுற மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுய சிந்தனை இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால், அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக்கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொதுநலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்கமுடியும்.
"கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும்பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். நளினப் பண்பு இல்லாமல்,