பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

27


இவ்வாறு கோ கொடுப்பவர் சரியாகச் சொல்கின்ற பொழுது, கீழே காணும் மூன்று செயல்களும் சரியென்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

அ. கோ கொடுக்கும் பொழுது, ஓடி விரட்டி வருபவர் அந்தக் குறிப்பிட்டக் கட்டத்தில் உட்கார்ந்திருப்பவரின் குறுக்குக் கோட்டை மிதித்தவாறுதான் கோ கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. குறுக்குக் கோட்டை மிதிப்பதற்கு முன்பே கோ கொடுக்கலாம். அது சரியே.

ஆ. அதேபோல், கோ கொடுக்கும் பொழுது, அந்தக் குறுக்குக் கோட்டின் மீது நின்று கொண்டும் கோ கொடுக்கலாம்.

இ. கோ கொடுக்கின்ற பொழுது, கோ கொடுப்பவரின் காலானது குறுக்குக் கோட்டில் இருந்து, அவரது உடலோ அல்லது உடலின் ஒரு பகுதியோ குறுக்குக் கோட்டைக் கடந்து சென்றுவிட்டாலும், அது தவறில்லை. சரியென்றே ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

5. தவறு (Foul)

உட்கார்ந்திருக்கும் விரட்டுபவர் அல்லது ஓடி விரட்டுபவர் யாராயினும் சரி, ஆட்டத்திற்குரிய எந்த விதியை மீறினாலும், அது தவறென்று கொள்ளப்படும்.

தவறு நிகழ்ந்தவுடன், அது தவறென்று சுட்டிக் காட்டப்படுவதற்கும், தவறு செய்தவர் அத்தவறை உடனே திருத்திக் கொள்வதற்காகவும், தொடர்ந்தாற் போல் ஒலிக்கும் தொடரலையில் சிறுசிறு விசில் ஒலியால் (Short Whistle) குறி காட்டப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/29&oldid=1377533" இலிருந்து மீள்விக்கப்பட்டது