உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசி நாளில் கட்டில் அருகில் நீ இருந்துன் பூவிரல்களால் காய்ந்த என் கன்னங்களைத் தீண்ட வேண்டும் அணையும் சோதியைத் தூண்டவேண்டும். மூச்சுத் திணறிக் தடுமாறி முற்றிற்று எனக் கதை முடியும் நொடியில் நெற்றியை வருடித் தடவி என் நெஞ்சில் நீ சாயவேண்டும்.... இதமாய், மெதுவாய் நான் ஒயவேண்டும் என் கண்ணே, நீ இல்லாவிட்டால் என்னால் சாக முடியாது தினமணி தீபாவளி மலர் கோடையும் வசந்தமும் O 199