பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரம் அவன்..... அனைத்துத் தொழிலுக்கும்.... யாராலும் தொடமுடியாச் சிகரம் அவன்.... O தேவர்க்கு மட்டும் அமுதளித்தார் சிவபெருமான் யாவர்க்கும் அமுதளிக்கும் அண்ணல் உழவன் அவன் அரிய உணவு தன்னை ஆக்கல்: சுட்டெரிக்கும் பெரிய பசிதன்னைப் பெயர்த் தொழித்தல் உயிரைக் காத்தல் என்றுலகில் கச்சிதமாய் முத்தொழிலும் வாய்த்த மனிதன் அவன்! அவன் கீர்த்தி பெரிது; கேள்விப் பட்டால் மும் மூர்த்திகளும் கூடக் கைகட்டி முன்நிற்பார்.... என்றெல்லாம், ஏடெல்லாம் இசைக்கலாம் நாடெல்லாம் பேசலாம்.... என்றாலும் நால்வருணவேற்றுமையை நாட்டியவர் அவனைத்தான் கீழ்வருண மென்றுரைத்தார். கேவலமாய் அன்றுரைத்தார். ○ 72 0 மீரா