இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏசு பிரானைச் சிலுவையில் அறைந்ததைப் போல் அந்த இளைத்த பிரானை இதயத்தில் அறைய ஆணி தேடும் அருளாளர் இங்கதிகம் ○ ஆனை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் விவசாயி இருந்தால் முதலாளிக்கோ - வியாபாரிக்கோ பல்லாயிரம் பொன்... இறந்தால் அவன் மனைவி மக்கள் வாயில் மண். ○ மனைவிக்கு மாற்றி உடுத்த ஒரு சேலை பள்ளிக்குப் போகும் பச்சை மயிலுக்கு ஒரு புதுப் பாவாடை தலையில் கொஞ்சம் பூவாடை சின்னப் பிள்ளைக்கு வண்ணச் சொக்காய் தனக்கொரு நாலுமுழ வேட்டி இப்படி எதற்கும் தை பிறக்கட்டும் என்று 75 0 மீரா