பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லமுதம் ஆசிரியர் : திரு. அ. க. நவநீதகிருட்டிணன் வள்ளுவர் வகுத்த வழியில் செல்லவும், அதன் சிறப்பினை உணரவும், உலகிற்கு உணர்த் தவும் துவங்கியுள்ளது இன்றைய தமிழகம். அதன் அறிகுறியே நாடெங்கும் இற்றைநாள் பல்கிப் பெருகிவரும் திருக்குறள் விளக்க வுரை களும், கருத்துரைகளும் மற்றும் பலவும் ஆகும். ஆல்ை, திருக்குறளின் பொதுவுரையை எல் லோரும் எளிதில் படித்துப் பயன் பெறுமளவிற்கு இனிமையும் எளிமையும், அதேபோது விளக்கமும் உடைய உரைநூல் அமைந்திலது. அக் குறை பாட்டினை நீக்குமுகத்தான் இந் நூலாசிரியர் வள்ளுவர் சொல்லமுதம் என்னும் இந் நூலினை மிக அழகாகத் தொகுத்துள்ளார். இது நான்கு பகுதி களாக வெளிவந்துள்ளது. படித்தற் கெளியதுபயனுடையது. அனைவரும் படித்தி. புறத்தக்கது. நூலகங்களிலும், பள்ளி மாணவர்களிடையேயும் இருக்கவேண்டிய இன்றியமையாத நூல். நான்கு பகுதிகள்; தனித் தனி விலை கு. 1-50.