பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கோப்பெருந்தேவியர் யடைந்த இடமே பாண்டிய நாடு என்று பகர்ந்தனர் பாரதம் பாடிய அப்புலவர். பாண்டிய மன்னருள் பாவலர் இங்ங்னம் தமிழ் வளர்த்த பாண்டியருள்ளே பலர் பைந்தமிழ்ப் புலமையாளராகவும் விளங்கினர். பாண்டியன் அறிவுடை கம்பி, கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் போன்ற பாண்டிய வேந்தர்கள் கருத்து நலங்கனிந்த கவிபாடும் பெரும் புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இவர்கள் பாடிய பாக்கள், புறநானூறு போன்ற பழந்தமிழ்ச் சங்க நூல் களில் இடம் பெற்றுள்ளன. இவர்களுள் ஒருவனகிய பூதப்பாண்டியன் புலமை கலங்கனிந்த புரவலனவான். இவன் போரில் வல்ல வீரனுமாவான். . ஒல்லையூர் கொண்ட வல்லவன் முன்னாளில் பாண்டிய நாட்டின் வடவெல்லே நாடுகளுள் ஒன்ருக ஒல்லையூர் நாடு விளங்கியது. புதுக்கோட்டையைச் சார்ந்த ஒலியமங்கலம் என்னும் ஊரே ஒல்லேயூர் எனப்படுவது, அவ் ஒல்லையூரும் அதைச் சூழ்ந்துள்ள நாடும் ஒல்லேயூர் நாடு என்று சொல்லப்பெறும். பாண்டியர்க்குரிய அங்கிலப்பகுதி யினை ஒருகால் சோழர் கைப்பற்றிக் கொண்டனர். பாண்டி நாட்டின் எல்லேயில் பகைவராகிய சோழர் வந்துவிட்டதால் பாண்டிகாட்டின் காவல் பழுதுற்றது. அது கண்ட பாண்டி நாட்டு மக்கள் மிக்க கவலை கொண்டனர். அங்காளில் பாண்டி நாட்டு ஆட்சியை