128
கபோதிபுரக்
முடியுமா என்பவர். தாரமிழந்தவர், இருவருமாக பழைய ஜமீன் பெருமையைக்கூறி, ஊரை ஏய்ப்பதும் உலவுவதுமாகவே இருந்தனர்.
ராதா கருப்பையா உறவு நல்லதொரு தங்கச் சுரங்கம் என்று சிங்காரவேலன் எண்ணினான். அவனுடைய சிந்தனையில் சூதுவலை உடனே வளர்ந்தது; கோகிலத்திடம் கலந்தான்.
“பேஷான யோசனை அண்ணா! சரியான யோசனை!”
“நம் யோசனை எது சரியானதாக இராமற் போய்விட்டது கோகிலம்?”
“இந்த ‘விடுமுறை’ வியாபார தோரணையில் நமக்கு மிகச் சிறந்தது.”
“ஆமாம்! நாம் போடப்போகும் ‘முதல்தொகை’ மிகச் சொற்பம். கோடாக் நாதனின் கருணையால், நமக்குக் குறைவே ஏற்படாது” என்றான் சிங்காரவேலன்.
கோகிலம் அண்ணனின் சமர்த்தை எண்ணிச் சிரித்தாள்.
அண்ணனும் தங்கையுமாகச் சிரிக்கும் நேரத்திலே, ராதா, அங்கு வந்தாள். “சிரிக்கும் காரணம் என்னவோ?” என்று கேட்டாள்.
“நாங்களா! சிரிப்பதா! ஏன் அண்ணா நாம் எதற்காகச் சிரித்தோம்”— என்று கோகிலம் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியும், பேசிய விதமும், ராதாவுக்கும் சிரிப்பை உண்டாக்கிவிட்டது.
மூவருமாக, விழுந்து விழுந்து சிரித்தனர்! “பேதைப் பெண்ணே, சிக்கினாயா” என்று சிங்காரவேலன் எண்ணினான்!!