150
கபோதிபுரக்
“அம்மா! நீ விஷயமேதுமறியாய். இந்தப் படத்தை ஒரு போக்கிரி வைத்துக்கொண்டு, ராதாவை மிரட்டிக் கொண்டிருந்தான். பாவம், நம் ராதா, எவ்வளவு பயந்தாளோ, பதைத்தாளோ, அழுதாளோ, நமக்கென்ன தெரியும். என்னிடம் இது தற்செயலாகச் சிக்கிற்று. இதனை ராதாவிடமே கொடுத்துவிட்டால் அவள் மனம் நிம்மதியாகும்!” என்றான் பரந்தாமன்.
“தம்பி, பரந்தாமா! உனக்குத்தான் அவள்மீது எவ்வளவு ஆசை. உம்! உன்னைக் கட்டிக் கொண்டிருந்தால் அவளுக்குப் பாடும் இல்லை, பழியும் இல்லை” என்றாள் தாய்.
“ஆமாம்! எனக்கு ராதா கிட்டாது போனதால்தான் வாழ்வுமில்லை, வகையுமில்லை” என்று அழுதான் பரந்தாமன்.
“நாளைக் காலையில் நான் சேதிவிடுத்து, அவளை இங்கு வரவழைக்கிறேன். நீ உடையைக் களைத்துவிட்டு, வேறு துண்டு உடுத்திக்கொண்டு படுத்துறங்கு" என்று வேதவல்லி யம்மை கூறினாள்.
“ஆகட்டும்” என்றான்; ஆனால் அழுத கண்களுடனும் நனைந்த ஆடையுடனும் படுத்துப் புரண்டான். அலைச்சலாலும், அடைமழையில் நனைந்ததாலும், மன மிக நொந்ததாலும், பரந்தாமனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. கண் திறக்கவும் முடியாதபடி காய்ச்சல். ஊரில் மழையும் நிற்கவில்லை. உடலில் சுரமும் நிற்கவில்லை. ஆறுகள் பாலங்களை உடைத்துக் கொண்டு ஓடின! வயல்கள் குளமாயின. செயல் மறந்து படுத்திருந்தான் பரந்தாமன்.
ஜுரம் முற்றிற்று. உடலும் திடீரென சிவந்தது. வேதவல்லி தனக்குத் தெரிந்த சில்லரை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தாள். ஒன்றுக்கும் ஜூரம் கேட்கவில்லை.
பரந்தாமன் அலற ஆரம்பித்தான். வேதம் அழுது கொண்டிருந்தாள். ராதாவுக்குச் சொல்லி அனுப்பிப் பயனில்லை. “எப்படி நான் அவர் முகத்தைப் பார்ப்பேன்” என்று இடிந்து