உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

157

சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருக்கி ஊற்றப்பட்டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சருக்கு மரமாக்கிவிட்டது. அதில் தம்மிஷ்டப்படி செல்ல விரும்பிச் சருக்கி விழுந்து சாய்ந்தவர், கோடி கோடி! இதில் ராதா ஒருத்தி.

“ராதா ஒரே ஒரு கேள்வி. என்மீது கோபிப்பதில்லையானால் கேட்கிறேன்” என்றான் பரந்தாமன்.

“குணசீலா, உன்மீது எனக்குக் கோபமா வரும்? கேள், ஆயிரம் கேள்விகள்” என்றாள்.

“அந்தப் படத்திலுள்ள கருப்பையாவுடன் நீ காதல் கொண்டிருந்தாயா?” என்று சற்று வருத்தத்துடன் கேட்டான் பரந்தாமன்.

“கருப்பையாவிடம் காதலா? வலை வீசும் வேடன்மீது புள்ளிமான் ஆசைகொண்டா வலையில் விழுகிறது” என்றாள் ராதா.

“தெரிந்து கொண்டேன். ஆம்! நான் எண்ணியபடி தான் இருக்கிறது. நீ அவன் மீது காதல் கொள்ளவில்லை. அவன் உன் நிலைகண்டு உன்னைக் கெடுத்தான். நீ என்ன செய்வாய்? பருவத்தில் சிறியவள்” என்று பரந்தாமன் கூறிக்கொண்டே ராதாவின் கரத்தைப் பிடித்துத் தன் மார்பின் மீது வைத்துக் கொண்டு, “ராதா! நீ இதனுள்ளே எப்போதும் இருந்து வந்தாய். அன்று உன்னை முந்திரிச்சோலையில் கண்டபோது உன் முத்திரை என் இருதயத்தில் ஆழப்பதிந்தது. அதனைப் பின்னர் அழிக்க யாராலும் முடியவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் தடவை “அரகரா சிவசிவா? அம்பலவாணா” என்று சொல்லிப் பார்த்தேன். உன் கவனம் மாறவில்லை. தில்லை, திருவானைக்காவல், காஞ்சி எனும் ஸ்தலங்களெல்லாம் சென்றேன். என் ‘காதல்’ கரையவில்லை; எப்படிக் கரையும்? “உமை ஒரு பாகன்” “இலட்சுமி நாராயணன்” “வள்ளி மணாளன் முருகன்” “வல்லபை லோலன்” என்றுதான் எங்கும் கண்டேன். நான் தேடிய